உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3-வது நாள் ஆட்டத்தினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணியே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஓவல் மைதானத்தில் தனது பாகிஸ்தான் ரசிகர் ஒருவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுக்க ஹர்பஜன் சிங் மண்டியிட்டு போட்டுக்கொடுத்தார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளர் குழுவில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளார். இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்ததும், போட்டியைக் காண வந்திருந்த மாற்றுத்திறனாளி பாகிஸ்தான் ரசிகரை ஹர்பஜன் வாழ்த்தினார். மைதானத்தினை எல்லைக்கோடு அருகே சென்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். அப்போது போது ஹர்பஜன் சிங்கும் மண்டியிட்டு அமர்ந்து ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தற்போது ஹர்பஜன் சிங்கின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு, இந்திய ரசிகர்களுடன், பாகிஸ்தான் மக்களும் தொடர்ந்து தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பாகிஸ்தான் ரசிகருக்கு ஹர்பஜன் ஆட்டோகிராப் கொடுக்கும் போது, அந்த ரசிகரிடம் ஒருவர் கேள்வி கேட்டார். ஹர்பஜன் சிங் யாருடைய நண்பர் என்று பார்வையாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அந்த ரசிகர் சோயப் அக்தர் என பதிலளித்தார்.
ஹர்பஜன் சிங் மற்றும் சோயப் அக்தர் இடையேயான நட்பு
ஹர்பஜன் சிங்குக்கும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கும் இடையேயான சண்டை கிரிக்கெட் களத்தில் பலமுறை நடந்து அது ஊடகங்களில் பக்கங்களை நிரப்பியுள்ளது. ஆனால் இருவரும் களத்திற்கு வெளியேயும் நல்ல நண்பர்கள் என்பதை அவ்வப்போது தங்களது நடவடிக்கைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் சேர்த்திருந்தனர். இதனடிப்படையில் ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மேலும் படிக்க,