சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்:
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சாஹலை கிருட்டு கிருட்டு என சுற்றிய வீராங்கனை:
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. இதில் யுஸ்வேந்திர சாஹல் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவ்வாக இருக்கும் சாஹல் தொடர்ந்து நடனம், நகைச்சுவை என பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதேபோல் மாடல் மற்றும் மருத்துவரான தன்னுடைய மனைவி தனாஶ்ரீ உடன் சேர்ந்து காதல் டூயட் பாடல்களுக்கும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் சாஹல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது சாஹலை மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் தோளில் வைத்து சுற்றும் வீடியோதான் அது. சஹாலை தனது தோளில் தூக்கிய சங்கீதா போகத், அவரை கிருட்டு கிருட்டு என சுற்றினார். தனாஸ்ரீயின் நண்பரான சங்கீதா போகத், சஹாலுடன் விளையாடியது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நகைச்சுவையான பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!