WPL 2023 Auction LIVE: மும்பை அணியில் கவுர்... பெங்களூரு அணியில் மந்தனா.. சூடுபிடித்த ஏலம்...!

‎Women's IPL Auction 2023 Live: மகளிர் ஐபிஎல் ஏலம் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

ABP NADU Last Updated: 13 Feb 2023 04:30 PM
WPL Auction 2023 LIVE: ரூ. 2 கோடிக்கு ஷெபாலி வர்மாவை ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி..!

இந்திய வீராங்கனை ஷெபாலி வர்மாவை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி

WPL Auction 2023 LIVE: மும்பை இந்தியன்ஸ் அணியின் கை மீண்டும் ஓங்கியது.. நியூசிலாந்து ஆல்-ரவுண்டரை எடுத்து அசத்தல்..!

நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர்ரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1 கோடி ஏலம் எடுத்தது. 

Women's IPL Auction LIVE: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்தான் இனி டெல்லி கேப்டனா..? ஏலம் எடுத்த டெல்லி கேபிடல்ஸ்..!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங்கை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 1.1 கோடி ஏலம் எடுத்தது. 

Women's IPL Auction LIVE: பாகிஸ்தான் அணியை பந்தாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்... டெல்லி கேபிடல்ஸ் அணி பதுக்கல்..!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜெமிமா ரோட்ரிக்ஸை டெல்லி கேபிடல்ஸ் அணி  ரூ. 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

Women's IPL Auction LIVE: இங்கிலாந்து நட்சத்திர பந்துவீச்சாளரை தூக்கிய UP வாரியர்ஸ்.. போடு மஜாதான்..!

இங்கிலாந்தின் நட்சத்திர பந்துவீச்சாளர் சோஃபி எக்லெஸ்டோனை UP வாரியர்ஸ் அணி ரூ. 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா.. வாரி எடுத்த UP வாரியர்ஸ்..!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை UP வாரியர்ஸ் அணி ரூ. 2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

மீண்டும் மீண்டும் பெங்களூரே ஆதிக்கம்.. நியூசிலாந்து வீராங்கனையை கைப்பற்றி அசத்தல்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைனை 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. 

ரேணுகா சிங் தாக்கூர் தட்டித்தூக்கிய பெங்களூர்.. ஆட்டம் இனிதான் ஆரம்பம்..!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்கூரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ. 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர்.. எல்லிஸ் பெர்ரியை ஏலம் எடுத்த பெங்களூர் அணி..!

ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரியை பெங்களூர் அணி ரூ.1.7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

18ம் எண்ணை கையகப்படுத்திய பெங்களூரு அணி.. கோலியும், ஸ்மிருதி மந்தனாவும் ஒரே அணி..!

இந்திய ஆடவர் அணியில் 18 ம் எண் கொண்ட ஜெர்சி அணியும் விராட் மற்றும் மகளிர் அணியில் 18 ம் எண் கொண்ட ஜெர்சி அணியும் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணிக்காக விளையாடுகின்றனர்.

மும்பை அணியில் கேப்டன் சிங்கங்கள்... ரோகித்தும், கவுரும் இனி ஒரே அணி..!

இந்திய ஆண்கள் அணி கேப்டன் ரோகித் சர்மாவும், பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பது ஐபிஎல்-லில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

WPL 2023 Auction LIVE: பெங்களூரு அணியில் மந்தனா.. கேப்டனாக களமிறங்குவாரா..?

மகளிர் பிரிமீயர் லீக் ஏலம் : இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி

WPL 2023 Auction LIVE: முந்திய மும்பை அணி.. கவுரை தட்டித்தூக்கி அமர்களம்..!

மகளிர் பிரிமீயர் லீக் ஏலம் : இந்திய கேப்டப் ஹர்மன் பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. 

Background

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்:


முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்க உள்ள, வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த ஏலம் தொடங்க உள்ளது. இதில் தங்களுக்கான 90 வீராங்கனைகளை தேர்வு செய்ய, 5 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


ஏலத்தை நடத்தப்போது யார்?


மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏலத்தை, இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் நடத்த உள்ளார்.  மும்பையைச் சேர்ந்த கலை பொருட்கள் சேகரிப்பாளரும்,  ஆலோசகருமான மல்லிகா சாகர் தான் இந்த ஏலத்தை நடத்த இருக்கிறார். ஏலம் விடுவதில் பெரிய அனுபவம் கொண்ட இவர், கடந்த 2021ம் ஆண்டு புரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும்  நடத்தியுள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை நடத்த வெளிநாட்டவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தை இந்திய பெண் ஒருவரே நடத்த உள்ளார்.


இறுதி ஏலப்பட்டியல்:


இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம்  1,525 பேர் முன்பதிவு செய்த நிலையில், இறுதியாக 409 பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளது.  அதில், 246 பேர் இந்தியர்கள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். இந்த வீராங்கனைகள் மார்க்யூ வீரர்கள், பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் என பல்வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு அணிக்கு 18 பேர் என மொத்தமே 90 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.  அவர்களில் 60 பேர் இந்திய வீராங்கனைகள். மீதமுள்ள 30 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.


ஏலத்தொகை:


தங்களுக்கான வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம்  அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதிகப்படியான ஏலத்தொகை:


அதிபட்ச அடிப்படை ஏலத்தொகையான ரூ.50 லட்சம் பிரிவில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட 10 இந்தியர்கள் உட்பட 24 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று, அடிப்படை ஏலத்தொகையான 40 லட்ச ரூபாய் பட்டியலில் 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


அதிக விலைக்கு போக வாய்ப்பு:


இந்த ஏலத்தில் ஒரு சில முக்கியமான வீராங்கனைகளை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், ஷஃபாலி வர்மா, சுசி பேட்ஸ், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர், தீப்தி ஷர்மா மற்றும் எல்லீஸ் அலெக்சாண்ட்ரா பெர்ரி உள்ளிட்டோர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள்:


1. குஜராத் ஜெயண்ட்ஸ்


2. உபி வாரியர்ஸ்


3. டெல்லி


4. பெங்களூரு


5. மும்பை


மகளிர் ஐபிஎல்:


முதல்முறையாக நடைபெற உள்ள மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.  வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. அறிமுக தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும் எனவும், பர்போர்ன் மற்றும் டி.ஓய். பட்டேல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.