நியூசிலாந்திற்கு எதிரான ODI தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும், வாஷிங்டன் சுந்தருக்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தன. காயங்கள் காரணமாக பல ஆட்டங்களில் இடம்பெறாமல் இருந்த சுந்தர் அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். பவுலிங் ஆல்ரவுண்டராகக் கருதப்படும் வாஷிங்டன் சுந்தர், ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் முறையே 37* மற்றும் 51 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து, பேட்டிங்கில் கவனிக்கத்தக்க வீரராக மாறியுள்ளார்.


ஆக்லாந்தில், அவரது கேமியோ இந்தியாவை 300 ரன்களுக்கு மேல் எடுத்துச்சென்றது. அதே போல கிறிஸ்ட்சர்ச்சில், தனது முதல் ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்தார். சதத்தால் இந்தியாவை 200 ரன்களை கடக்க வைத்து பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கையோ தந்தார். இருப்பினும், மழையால் போட்டி கைவிடப்பட்டபின் 23 வயதான வாஷிங்டன் சுந்தரிடம் முன்னாள் இடதுகை ஸ்பின்னர் முரளி கார்த்திக் பேட்டி எடுத்தார். அவர் கேள்விக்கு பதிலளிக்கும் போது, ​​அவர் எங்கிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்.



உளரிய வாஷிங்டன்


இந்த ஆண்டின் தொடக்கத்தில் லங்காஷயர் இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அந்த போட்டியின் போது இங்கிலாந்து குளிரை சமாளித்து விளையாடியதை குறிப்பிட்டார். அப்போது அதே போல இந்த மைதானத்தின் குளிரையும் சமாளித்து விளையாடியதாக கூற வந்த வாஷிங்டன் சுந்தர் எந்த மைதானம் என்பதை மறந்தார். "மான்செஸ்டரில் லங்காஷயர் அணிக்காக விளையாடும்போது மிகவும் குளிராக இருந்தது. அங்கு சமாளித்து போல இங்கேயும்… ம்ம்ம்ம் ... அதே போல… நாம எங்கே இருக்கோம்?", என்று குழப்பமாக கேட்டார். உடனே "நாம் கிறைஸ்ட்சர்ச்சில் இருக்கிறோம்" என்று கார்த்திக் கூற வாஷிங்டன் பின்னர் தொடர்ந்தார், "ஆமாம், இன்று இது போன்ற குளிர் நிலைமைகளில் விளையாட அது உதவியது", என்றார்.


தொடர்புடைய செய்திகள்: மருமகளால் வந்த வில்லங்கம்..! ரோஜர் பின்னியின் பி.சி.சி.ஐ. தலைவர் பதவி பறிபோகிறதா..? நடந்தது என்ன..?


நேர்த்தியான ஆட்டம் ஆடிய வாஷிங்டன்


ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி அரை சதம் கடந்த அவர் 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்தியா 149/6 என்று போராடிக்கொண்டிருந்த நிலையில், வாஷிங்டன் வந்து அதிரடி ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடி பக்குவமாக அணியை மீட்டு சென்றார். இரண்டு பார்ட்னர்ஷிப்களை உருவாக்கிய அவர், தீபக் சாஹருடன் எட்டாவது விக்கெட்டுக்கு 21 ரன்கள் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுடன் ஒன்பதாவது விக்கெட்டுக்கு 31 ரன்களும் குவித்தார். வாஷிங்டன் சுந்தர், டிம் சவுதி வீசிய 48வது ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து அரை சதத்தை எட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்ததால், இந்தியா 48 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தது.






தொடரை இழந்த இந்தியா


"எனக்கு பயிற்சியாளரிடமிருந்து சில செய்திகள் வந்தன, எனது செயல்முறை மற்றும் எனது பேட்டிங்கில் கடந்த காலத்தில் எனக்கு உதவிய அனைத்தையும் செய்தேன். நான் திட்டங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்க முயற்சித்தேன். உள்ளுணர்வை பின்பற்றினால் மற்ற விஷயங்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும்" என்று அவர் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக கூறினார்.


வாஷிங்டன் பேட்டிங்கில் பங்களித்திருந்தாலும், இந்தியாவுக்கு ஒரு விக்கெட் எடுத்துக் கொடுப்பதில் தோல்வியடைந்தார். நியூசிலாந்தின் தொடக்க ஜோடியான ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் 97 ரன்களை சேர்த்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்ததால், அவர் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்தார். நியூசிலாந்து வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்துவதற்கு முன், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.