டி20 போட்டி:


பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று (ஜனவரி 11) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1- 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர், இலக்கை நோக்கி களம் இறங்கியது இந்திய அணி. அதன்படி, கடந்த 14 மாதங்களுக்கு பிறகு டி 20 போட்டிகளுக்கு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். வெகுநாட்களுக்கு பிறகு சர்வதேச டி 20 போட்டியில் அவர் களம் இறங்கியதால் அவரின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரன் அவுட்டானார்.


ரன் அவுட்டான ரோகித்:


அதன்படி, முதல் ஓவரை ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராஹிம் சத்ரான் வீசினார். அதில், இரண்டாவது பந்து வீசிய போது ஓங்கி அடித்தார் ரோகித் சர்மா. அப்போது ரன் எடுக்கும் முனைப்பில் ரோகித் ஓட மறுபுறம் நின்று கொண்டிருந்த சுப்மன் கில் அப்படியே நின்றார். இதனை சற்றும் ரோகித் சர்மா எதிர்பார்க்கவில்லைஇதனிடையே விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரோகித் சர்மாவை ரன் அவுட் செய்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த ரோகித் சர்மா தான் ரன் அவுட் ஆவதற்கு காரணமாக இருந்த சுப்மன் கில்லை பார்த்து ஏதோ திட்டிய படி நடந்து சென்றார்


விரக்தியடைந்த வீர்கள்:


இந்நிலையில் ரன் அவுட் குறித்து ரோகித் சர்மா பேசுகையில், “ ரன் அவுட் விளையாட்டின் போது நடக்கும் ஒன்றுதான். ஆனால், அது நடக்கும் போது  அணிக்காக ரன் எடுக்க வேண்டும் என்று நினைத்த நீங்கள் விரக்தியடைவீர்கள். அதேநேரம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிக முக்கியமானது.


அதேபோல், நான் ரன் அவுட் ஆகி இருந்தாலும் சுப்மன் கில் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த போட்டியில் நிறைய நேர்மறைகள் இருந்தன. ஷிவம் துபே மற்றும் ஜிதேஷ் பேட்டிங் செய்த விதம் நன்றாக இருந்தது. திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் நல்ல பார்மில் இருக்கிறார்கள்என்று கூறினார் ரோகித் சர்மா.


 


மேலும் படிக்க: Watch: வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த கில்லால் ரன் ஆவுட்; திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பிய ரோகித் - வீடியோ வைரல்


 


மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!