டி 20:


தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகுஇந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறதுஇந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கியிருக்கிறது.  இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினார்கள்அந்தவகையில் இருவரும் தங்களுடைய பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்சரியான பார்ட்னர்ஷிப் அமைத்த குர்பாஸ் மற்றும் ஜத்ரான் ஜோடி 50 ரன்களை குவித்ததுமுதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் 7 ஓவர் வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.


அப்போது அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்கள் எடுத்தார். பின்னர்இந்திய அணி சார்பில் 8 வது ஓவரை ஷிவம் துபே வீசினார்ஷிவம் துபே வீசிய இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்அதன்படி, 22 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 25 ரன்கள் எடுக்க அடுத்த வந்த முகமது நபி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ரன்களை குவித்தார். இவ்வாறாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 158 ரன்கள் எடுத்து. பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களம் இறங்கியது இந்திய அணி.


 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 14 மாதங்களுக்கு பிறகு சர்வதேச் டி 20 போட்டியில் களமிறங்கினார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அந்த வகையில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் களம் இறங்கினார். இதில், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரன் அவுட் ஆனார் ரோகித் சர்மா. ரன் எடுக்க ஓடிய போது மறுபுறம் நின்றுகொண்டிருந்த சுப்மன் கில் நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தாதல் ரோகித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா 26 ரன்கள் எடுக்க சுப்மன் கில் 22 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


 


அரைசதம் விளாசிய துபே:


 


பின்னர் வந்த ஷிபம் துபே அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. எதிர் முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் களத்தில் ருத்ரதாண்டவமாடினார் துபே. இவரது விக்கெட்டினை கைப்பற்ற ஆஃப்கான் வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இறுதிவரை முடியவில்லை. இறுதி வரை களத்தில் இருந்த அவர் 40 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.