இந்திய கிரிக்கெட் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரை சிறப்பாக கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் முதல் முறையாக இந்த இரண்டு தொடர்களிலும் செயல்பட்டார். இதன்மூலம் தனது பதவிக்காலத்தை வெற்றியுடன் டிராவிட் தொடங்கியுள்ளார். 


இந்த தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, டி20 உலகக்கோப்பையில் விளையாடிய இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் அஷ்வின் இடம் பிடித்திருந்தார். இது குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது, “மீண்டும் வொயிட் பால் கிரிக்கெட்டில் அஷ்வின் கம்-பேக் தருவார் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால்,  உலகக்கோப்பைகான இந்திய அணியில் அஷ்வின் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என விராட் தெரிவித்திருந்தார். மேலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். அனைவரும் அஷ்வினைப் பற்றி பேசுகின்றனர். கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு பிறகு டிராவிட் அஷ்வினை புகழ்ந்திருந்தார்” என கங்குலி தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க: Kohli Press Conference: ‛பதவி விலகலை தெரிவித்த போது பிசிசிஐ தடுக்கவில்லை’ -போட்டு உடைத்த கோலி!


வீடியோவை காண:






டி20 உலகக்கோப்பை தொடரில் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்த அஷ்வின், அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண