இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது. கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது. 


டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட், டி20 தொடர்களை வென்று அசத்தி இருக்கிறது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றிருந்த விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக செயல்பட்டிருந்தார். 






மேலும் படிக்க: Kohli on Dravid: ‛அடுத்த போட்டிக்கு தயாராக இருக்கிறோம்... டிராவிட் இருக்கிறார்...’ - வெற்றிக்குப் பின் கோலி பேட்டி!


இந்த போட்டியில் கிரிக்கெட்டும், கிரிக்கெட்டை தாண்டிய சுவாரஸ்ய சம்பவங்களும் நெட்டிசன்களின் கண்களில் சிக்காமல் இருப்பதில்லை. முதல் இன்னிங்ஸில் அவுட் கொடுக்கப்பட்டபோது கோலி கோவமானது, அடுத்த இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அம்பயரை கலாய்த்தது என கோலியின் வீடியோக்கள் வைரல் ரகம்தான். அந்த வரிசையில், கோலியின் டான்ஸ் வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. 


போட்டியின் நான்காவது நாளன்று, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாட்டு பாடி இந்திய அணியை உற்சாகப்படுத்த கேப்டன் கோலியை நடனமாடுமாறு கோரிக்கை வைக்கின்றனர். அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி, நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோவை கோலி ரசிகர்கள் இப்போது பகிர்ந்து வருகின்றனர்.


வீடியோவை காண:






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண