இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இதில், 3 டி20 போட்டிகளையும் வென்ற இந்திய அணி,  அடுத்த நடந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 


கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது. 






இந்நிலையில், போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது மைதானத்தில் சுற்றி கொண்டிருந்த ஸ்பைடி கேமரா திடீரென நின்றுவிட்டது. அப்போது, மைதானத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் கேமராவை வைத்து விளையாடிய வீடியோ வைரலானது.


நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இந்நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியது இந்திய அணி.










மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண