இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இதில், 3 டி20 போட்டிகளையும் வென்ற இந்திய அணி,  அடுத்த நடந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 


கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது. 






டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட், டி20 தொடர்களை வென்று அசத்தி இருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்தபின் டிராவிட் பற்றி பேசிய கோலி, “வெற்றியோடு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினோம். எனினும், அணியாக முன்னேற்றி கொள்ள வேண்டியதை பற்றி விவாதித்தோம். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறோம். ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பிறகு, மைண்ட் கேம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லி கொண்டே இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே இப்போதைய திட்டம். தென்னாப்ரிக்காவில் விளையாடுவது சவாலாகவே இருக்கும். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக தொடங்க வேண்டும் என இருக்கின்றோம். எந்த இடத்திலும் வெற்றி பெற முடியும் என நம்புகின்றோம். சவாலாக இருக்கின்றது, அனைவரும் உத்வேகத்துடன் இருக்கின்றோம், சாதிக்க இருக்கின்றோம்” என தெரிவித்திருக்கிறார்.


இன்று போட்டி தொடங்கிய 45 நிமிடங்களுக்குள் ஜெயந்த யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெடுகள் விழ, கடைசியாக அஷ்வின் பந்துவீச்சில் 10வது விக்கெட் விழுந்து போட்டியையும், தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்திய அணி. இதனால், டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள் போட்டியை முடித்தது இந்திய அணி.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண