இந்தூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக மாறிய நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை 109 ரன்களுக்கு சுருட்டினர். இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் பிட்ச்சில் பந்து கூடுதலாக திரும்புவதை கண்டு அதிர்ந்தனர். ஆஸ்திரேலிய சூழல் இம்முறை தெறிக்கவிட, மளமளவென விக்கெட்டுகள் சரியத் துவங்கின. அதிலெல்லாம் சிறப்பு என்னவென்றால், சேட்டேஷ்வர் புஜாராவின் விக்கெட்தான். அவரது விக்கெட் அனைவரையும் திகைக்க வைத்தது.






அபாரமான சூழல் பந்து


போட்டியின் ஒன்பதாவது ஓவரில், நாதன் லயன் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் பிட்ச் ஆக வீச, பந்து எவ்வளவு திரும்பினாலும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேதான் செல்லும் என்று கணித்து பின் காலை பாயிண்ட் திசைக்கு தள்ளி ஆட முற்பட்டார், ஆனால் பிட்ச் ஆன பந்து அபாரமாக திரும்பி கிட்டத்தட்ட லெக் ஸ்டம்பிற்கு வந்துவிட்டது. இதனை சற்றும் எதிர்பாராத புஜாரா முற்றிலும் வீழ்த்தபட்டார். அந்த பந்து அவரது பேட், கால், கை என அனைத்தையும் வீழ்த்தி, ஸ்டம்பை தாக்கியது. 


தொடர்புடைய செய்திகள்: Assembly Election Results 2023 LIVE: திரிபுராவில் ட்விஸ்ட்...பாஜகவுக்கு இணையான தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி முன்னிலை


அதிர்ந்த இந்திய அணி


பெவிலியனுக்குத் திரும்பிய புஜாராவின் முகத்தில் கடுமையான அதிர்ச்சி தெரிந்தது. அவர் மட்டுமல்ல கேப்டன் ரோஹித் கூட அதனை கண்டு திகைத்துப் போனார். அப்படி ஒரு பந்தை லயன் வீசினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளான புதன்கிழமை ஆட்ட நேர முடிவில் இந்தியா 109 ரன் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணியை ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் தவிடு பொடி ஆக்கினர்.






லீடிங்கில் ஆஸ்திரேலியா


அதே நிலை ஆஸ்திரேலியாவுக்கு வருமென்று நினைத்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணி சூழலை ஓரளவுக்கு சிறப்பாக கையாண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று மட்டும் 47 ரன் முன்னிலவ் பெற்றனர். இன்று தொடர்ந்து ஆடி வருகின்றனர். உஸ்மான் கவாஜா 147 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு மார்னஸ் லாபுசாக்னே (31) உடன் 96 ரன்களைப் குவித்து ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை பலப்படுத்தினார். டிராவிஸ் ஹெட் (9) ஆரம்பத்தில் ஆட்டமிழந்த பிறகு இருவரும் எச்சரிக்கையுடன் பேட் செய்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (7 ரன்), கேமரூன் கிரீன் (6 ரன்) கிரீஸில் இருந்தனர். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா (4/63) 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். நேற்றைய நாளை ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், விராட் கோலி (22), ஷுப்மான் கில் (21) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு எதிர்ப்பை காண்பித்தனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் (5/16) மற்றும் நாதன் லியான் (3/35) ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கினர்.