Assembly Election Results 2023 LIVE: பாஜகவுக்கு ஏறுமுகம்; நாகலாந்தில் தனித்து ஆட்சி! திரிபுராவில் கூட்டணி ஆட்சி..!

Assembly Election Results 2023 LIVE Updates: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் விவரங்களை உடனுக்குடன் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்...

ஜான்சி ராணி Last Updated: 02 Mar 2023 09:20 PM
மேகாலயாவில் பாஜகவை நாடும் தேமக..!

மேகாலாயாவில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 26 இடங்களில் வெற்றி பெற்று முதலிடம் வகித்தாலும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை தேமகவுக்கு இல்லை. எனவே சுயேட்சைகளிடமும், பாஜகவிடமும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

நாகலாந்தில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை..!

நாகலாந்தில் பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. 

திரிபுராவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக..!

திரிபுராவில் பாஜக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளனர். இங்கு, சிபிஎம் கூட்டணி 14 இடங்களிலும், திமோக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

மூன்று மாநில தேர்தல்: உரையாற்ற உள்ள பிரதமர் மோடி..!

மூன்று மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி..!

தெற்கு தூரா தொகுதியில் போட்டியிட்ட மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.

92 சதவிகிதி வாக்குகளை பெற்ற நாகாலாந்து முதலமைச்சர் நெபியு ரியோ அபார வெற்றி..!

நாகாலாந்தில் வடக்கு அங்காமி 11 தொகுதியில் 92 சதவிகிதி வாக்குகளை பெற்று அம்மாநில முதலமைச்சர் நெபியு ரியோ அபார வெற்றி பெற்றுள்ளார்.

1,200 வாக்குகள் வித்தியாசத்தில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி..!

திரிபுராவில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா 18,731 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

திரிபுராவில் சாதனை படைத்த பாஜக...காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி படுதோல்வி..!

திரிபுராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக. ஆட்சி அமைப்பதற்கு 31 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், பாஜக 25 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே, தனித்து ஆட்சி அமைத்து சாதனை படைக்க உள்ளது பாஜக. 


இந்த தேர்தலில், காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மேலும் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

நாகாலாந்தில் என்டிபிபி - பாஜக கூட்டணி அமோக வெற்றி...!

நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 15 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 9 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேகாலயாவில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ்..!

3 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. 

3 மணி நிலவரம்: மேகாலயாவில் ஆட்சி அமைக்க உள்ள தேசிய மக்கள் கட்சி..!

3 மணி நிலவரப்படி, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மூன்று இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

3 மணி நிலவரம்: திரிபுராவில் தோல்வியை நோக்கி இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி

3 மணி நிலவரப்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.

3 மணி நிலவரம்: திரிபுராவில் வரலாறு படைத்துள்ள பாஜக..!

3 மணி நிலவரப்படி, திரிபுராவில் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், அங்கு பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

2 மணி நிலவரம்: மேகாலயாவில் இழுபறி

மேகாலயாவில், ஆளும் என்.பி.பி. கட்சி 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.



2 மணி நிலவரம்: நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சி

நாகாலாந்து மாநில தேர்தல்: பாஜக ஆட்சி அமைப்பதற்கு, தேவைக்கு அதிகமான பெரும்பான்மையுடன் உள்ளது.

2 மணி நிலவரம்: திரிபுராவில் ஆட்சியை பிடித்தது பாஜக

திரிபுரா மாநில தேர்தலில் பாஜக 34 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மையில்  உள்ளது. மேலும் டி.எம்.பி கட்சி ஆதரவளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.




 

திரிபுராவில் பாஜக வெற்றி...”அதிக இடங்களை பெறுவோம் என எதிர்பார்த்தோம்”- திரிபுரா முதல்வர் மாணிக் சஹா

திரிபுராவில் பாஜக வெற்றி: திரிபுராவில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம், அது ஏன் நடக்கவில்லை என்பது குறித்து பகுப்பாய்வு செய்வோம். இத்தருணத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என திரிபுரா முதல்வர் மாணிக் சஹாதெரிவித்தார். 





நாகாலாந்து தேர்தல்: வரலாற்றில் முதன்முறையாக பெண் வெற்றி

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் திமாபூர்-III தொகுதியில் ஹக்கானி ஜக்லு என்ற பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

2 மாநிலங்களில் பாஜக வெற்றி; பாஜக தலைமை அலுவலகத்துக்கு செல்லும் பிரதமர்

2 மாநிலங்களில் பாஜக வெற்றி வெற்றதை தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகத்துக்கு, இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் செல்கிறார்.

1 மணி நிலவரம்: மேகாலயாவில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.

மேகாலயாவில், ஆளும் என்.பி.பி. கட்சி 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.

1 மணி நிலவரம்: நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சி

நாகாலாந்து மாநில தேர்தல்: பாஜக ஆட்சி அமைப்பதற்கு, தேவைக்கு அதிகமான பெரும்பான்மையுடன் உள்ளது.

1 மணி நிலவரம்: திரிபுராவில் பாஜக பெரும்பான்மை

திரிபுரா மாநில தேர்தலில் பாஜக 34 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மையில் உள்ளது. 



3 மாநில தேர்தல்: இரண்டில் பாஜக ஆட்சி, ஒன்றில் இழுபறி

3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக பெரும்பான்மையுடனும், மேகாலயாவில் இழுபறியுடனும் நிலவரமுள்ளது 

மேகாலயாவில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை

மேகாலயாவில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. ஆளும் என்.பி.பி. கட்சி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தந்தையின் நினைவிடத்துக்கு சென்ற மேகாலயா முதலமைச்சர் கான்ராட்

மேகாலயாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரும் என்.பி.பி கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, அவரது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான பி.ஏ.சங்மாவின் நினைவிடத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

12 மணி நிலவரம்: நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சி?

நாகாலாந்து மாநில தேர்தல்: பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவைக்கு அதிகமான பெரும்பான்மையுடன் உள்ளது

12 மணி நிலவரம்: மேகாலயாவில் இழுபறி

மேகாலயா மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில், எந்த கட்சியும் பெரும்பான்மையின்றி உள்ளது.

12 மணி நிலவரம்: திரிபுராவில் பாஜக ஆட்சி?

திரிபுரா மாநில தேர்தலில் பாஜக 32 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மையுடன் உள்ளது. பாஜகவுக்கு டி.எம்.பி. கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

12 மணி நிலவரம்: திரிபுராவில் பாஜக ஆட்சி?

திரிபுரா மாநில தேர்தலில் பாஜக 32 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மையுடன் உள்ளது. பாஜகவுக்கு டி.எம்.பி. கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திரிபுரா தேர்தல்: பாஜகவுக்கு டி.எம்.பி ஆதரவு?, பாஜக வெற்றி உறுதியா?

திரிபுரா தேர்தல்: பாஜகவுக்கு டி.எம்.பி ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் , பாஜக முழுமையாக பெரும்பான்மை பெறாத நிலையில்,  டி.எம்.பி ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.

நாகாலாந்தில் பாஜக பெரும்பான்மை; திரிபுராவில் கடும் போட்டி; மேகாலயாவில் பின்னடைவு


நாகாலாந்தில் பாஜக பெரும்பான்மை; திரிபுராவில் கடும் போட்டி; மேகாலயாவில் பின்னடைவு

நாகாலாந்தில் பாஜக பெரும்பான்மையில் உள்ளது; திரிபுராவில் பாஜகவுக்கு இடது சாரி கூட்டணி கடும் போட்டி அளித்து வருகிறது, மேகாலயாவில் பாஜவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளது.

11 மணி நிலவரம்: நாகாலாந்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக

நாகாலாந்தில் உள்ள மொத்தம் 60 தொகுதிகளில் பாஜக கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

11 மணி நிலவரம்: மேகாலயாவில் பாஜக பின்னடைவு

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலின் 11 மணி நிலவரம்: மேகாலயாவில் உள்ள மொத்தம் 60 தொகுதிகளில் என்.பி.பி கட்சி 25 இடங்களில் முன்னிலை, திரிணாமுல் 7 இடங்களிலும், பாஜக 05 இடங்களிலும்  முன்னிலை வகிக்கிறது.

11 மணி நிலவரம்: திரிபுராவில் பாஜக முன்னிலை

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலின் 11 மணி நிலவரம்: திரிபுராவில் உள்ள மொத்தம் 60 தொகுதிகளில் பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை, இடது சாரி கூட்டணி 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது

நொடிக்கு நொடி பரபரப்பு...திரிபுராவில் தொடர் இழுபறி..பாஜகவின் நிலை என்ன?

திரிபுரா வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, 27 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

நாகாலாந்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி..!

நாகாலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 41 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சை உள்ளிட்ட மற்ற கட்சிகள் 15 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

திரிபுராவில் ட்விஸ்ட்...பாஜகவுக்கு இணையாக முன்னிலை பெற்று வரும் இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி

திரிபுராவில் பாஜக 23 தொகுதிகளிலும் இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் முன்னலை வகித்து வருகிறது.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: பாஜகவுக்கு கடும் போட்டி தரும் இடது சாரி கூட்டணி

திரிபுரா மாநிலத்தில் பாஜகவுக்கு கடும் போட்டி தந்து கொண்டிருக்கிறது இடது சாரி கூட்டணி

3 மாநில தேர்தல் நிலவரம்.. நாகாலாந்து, திரிபுராவில் பாஜக பெரும்பான்மை, மேகாலயாவில் இழுபறி

3 மாநில சட்டபேரவை தேர்தல்: நாகாலாந்து, திரிபுராவில் பாஜக பெரும்பான்மை வகிக்கிறது, மேகாலயாவில் இழுபறி நிலவுகிறது.



10 மணி நிலவரம்: திரிபுராவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை வகிக்கிறது

திரிபுரா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 60 தொகுதியில், பாஜக கூட்டணி 38 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

நாகாலாந்து தேர்தல்: மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் பாஜக

நாகாலாந்து தேர்தல்: மொத்தம் உள்ள 60 தொகுதியில் 50 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் பாஜக.

மேகாலயாவில் ஓங்குகிறது மம்தாவின் கை...திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

மேகாலயாவில் ஓங்குகிறது மம்தாவின் கை...திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 16 தொகுகளில் முன்னிலை

திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலை

திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதியில், பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 



நாகலாந்து தேர்தல்: பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் பாஜக

நாகலாந்து தேர்தல்: மொத்தம் உள்ள 60 தொகுதியில் 49 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் பாஜக.

மேகாலயா: பாஜகவை முந்திய காங்கிரஸ்

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் இழுபறி நிலவுகிறது. என்.பி.பி கட்சி 16 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது

மேகாலயாவில் இழுபறி; என்.பி.பி கட்சி 24 இடங்களில் முன்னிலை

மேகாலயாவில் என்.பி.பி கட்சி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

திரிபுரா, நாகலாந்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக ; மேகாலயாவில் பின்னடைவு

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்கவைக்கிறது. மேகாலயாவில் பின்னடைவு வகிக்கிறது.

திரிபுரா, நாகலாந்தில் பாஜக பெரும்பான்மை; மேகாலயாவில் பின்னடைவு

திரிபுரா மற்றும் நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை வகிக்கிறது; மேகாலயாவில் பின்னடைவு வகிக்கிறது

திரிபுராவில் பாஜக பெரும்பான்மை: 42/60

திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதியில் 40 தொகுதியில் பாஜக முன்னிலையுடன் பெரும்பான்மை வகிக்கிறது

நாகலாந்தில் 44 தொகுதியில் பாஜக கூட்டணி தொடர் முன்னிலை வகிக்கிறது.

நாகலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதியில் 44 தொகுதியில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பின்னடைவு; என்.பி.பி முன்னிலை

மேகலயாவில் என்.பி.பி கட்சி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

திரிபுராவில் பாஜக பெரும்பான்மை: 42/60

திரிபுராவில் பாஜக பெரும்பான்மையுடன் 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது: 42/60

நாகலாந்தில் பாஜக முன்னிலை: 42/60

நாகலாந்தில் 31 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

மேகலயாவில் பாஜக பின்னடைவு

மேகலயா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பின்னடைவு. என்.பி.பி கட்சி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

திரிபுராவில் பாஜக முன்னிலை: 38/60

திரிபுராவில் பாஜக 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது: 38/60

திரிபுராவில் பாஜக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை

திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 15 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னனி கூட்டணி 15 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. 15 / 60

நாகலாந்து சட்டபேரவை தேர்தல்: பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை: 1/60

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி ஒருவர் தேர்வானதால், பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது: 

3 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

3 மாநில சட்டப்பேரவை தேர்தல்: தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டபேரவைகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, இன்னும் சற்று நேரத்தில்  தொடங்கவுள்ளது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில், பலத்த பாதுகாப்பில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.





நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்


.





மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில், பலத்த பாதுகாப்பில் துணை ராணுவ படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.





மேகாலயா, நாகலாந்து

மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

திரிபுரா

60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

3 மாநில சட்டப்பேரவை தேர்தல்

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

Background

வடகிழக்கு மாநிலங்களான  திரிபுரா, மேகாலயா நாகலாந்து ஆகியவற்றின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 


திரிபுரா சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி,16- ஆம் தேதி நடைபெற்றது. மேகாலயா, நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி ,27 ஆம் தேதி நடந்தது.


மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.


திரிபுரா


ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்டது திரிபுரா மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்தது.


அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் ஐபிஎஃப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 


திரிபுராவில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதான எதிர்க் கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. இந்த கட்சிகளை தவிர்த்து மூன்றாவது முக்கிய கட்சியாக இருப்பது புதிதாக தொடங்கப்பட்ட திப்ரா மோதா கட்சி.


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேகாலயா


60 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேகாலயாவிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அங்கிருக்கும் தேசிய மக்கள் கட்சிக்கும் செல்வாக்கு அதிகம் என்பதால் இரண்டு கட்சிகளில் பெரும்பான்மை யாருக்கு என்ற போட்டி உள்ளது. 


நாகலாந்து 


நாகாலாந்திலும் NDPP - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதையே சொல்கின்றனர்.


மூன்று மாநிலங்களையும் சேர்த்து 180 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று மாநிலங்களிலும் யார் ஆட்சியைக் கைப்பற்றபோவது யார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.