2023 ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் விராட் கோலி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ளார். நேற்று (திங்கட்கழமை) அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்ட புகைப்படத்தில் புதிய ஹேர்ஸ்டைல் உடன் போஸ் கொடுத்தார். ரசிகர்கள் பலர் அவருக்கு ஹார்ட்டுகளை பறக்க விட்டனர்.


கோலியின் புதிய ஹேர்ஸ்டைல் 


கோலி பேட்டிங்கில் கிங் என்பதை தவிர, ஃபேஷனில் தான் ஒரு இளவரசன் என்பதை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருப்பவர். அதனாலேயே அவருக்கு விளம்பர வாய்ப்புகளும் அதிகம். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் இருந்து, டாட்டூ, ஹேர்கட் என எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பார். அவ்வப்போது ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொண்டே இருப்பது வழக்கம். தற்போது ஆசியக்கோபை போட்டிகள் வரவிருப்பதால், தனது புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி உள்ளார் கோலி.






கோலி கடைசியாக ஆடிய போட்டி


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிதான் கோஹ்லி கடைசியாக ஆடிய ஆட்டம். அதிலும் அவர் பேட்டிங் செய்யவேண்டிய அவசியம் இன்றி ஆட்டம் முடிந்தது.


இந்திய அணி அந்த போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில், கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகளை ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்து, தொடரை வென்றார்.


தொடர்புடைய செய்திகள்: Neeraj Chopra Mother : வீரனை வீரனா பாருங்க.. பாகிஸ்தான் வீரர் ஜெயிச்சாலும் சந்தோஷம்.. நீரஜ் சோப்ரா அம்மாவின் சாட்டையடி பதில்


ஃபேஷனான கிரிக்கெட்டர்


இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சந்தேகத்திற்கு இடமின்றி விளையாட்டின் மிகவும் ஃபேஷனான விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும், ஆதரவாளர்கள் மத்தியில் கோஹ்லியின் மவுசு குறையவில்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டில், கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல்,  ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கிறது. இந்த நிலையில் வீரர்களின் ஹேர்ஸ்டைல் முதல் டிரெஸ்ஸிங் வரை அனைத்தும் ரசிகர்களால் பின்பற்றப்படுகின்றது.



பயிற்சியில் இந்திய அணி


இந்திய முகாமில் இருக்கும் கோலி, இலங்கையில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முடிவெட்டிக் கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் பேச்சாக மாறியது. வெளியான கோலியின் புகைப்படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முல்தானில் புதன்கிழமை நடைபெறும் ஆசியக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன், பும்ராவும் டப்ளினில் இருந்து திரும்பும் மற்ற வீரர்களும் ஒன்று அல்லது இரண்டு பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பார்கள். அதன் பின்னர் இந்திய அணி பாகிஸ்தானை செப்டம்பர் 2 ஆம் தேதி எதிர்கொள்ளும்.