இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ரிஷப் பண்ட் குறித்தான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வீரர்கள் ஆசியக் கோப்பைக்கு தயாராகுவதற்கு முன்பாக, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பண்ட் அணியுடன் இருந்தார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






சமீபத்தில் ரிஷப் பண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பண்ட் தற்போது வேகமாக குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தார். ரிஷப் பண்ட் வேகமாக குணமடைந்து வருவதாக இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பயிற்சியில் பண்ட் விளையாடும் வீடியோ வெளியானது.






கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் பண்ட் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதன்பிறகு தற்போது அவர் மீண்டும் வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், சைக்கிள் ஓட்டும் போது பண்ட் வெளியிட்ட வீடியோவில், அவர் நீல நிற டி-சர்ட் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்துள்ளார்.


முன்னதாக, கார் விபத்துக்குப் பிறகு பண்ட் அறுவை சிகிச்சை செய்தபோது, ​​அந்த நேரத்தில் அவரால் நடக்கக்கூட முடியவில்லை. இதன் பிறகு ஊன்றுகோல் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார். தற்போது அவர் குணமடைவதில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பண்ட் உடல் தகுதி பெறும் வேகத்தை பார்த்தால் விரைவில் களம் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.


அடுத்த ஆண்டு இந்திய அணியில் ரிஷப் பண்ட்:


இந்திய அணி 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருடன் பண்ட் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை அறிவிக்கப்பட்ட நேரத்தில், இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம், பந்தின் உடற்தகுதி குறித்து கேட்டதற்கு, பந்த் இன்னும் அணிக்கான தேர்வுக்கு தகுதி பெறவில்லை என பதிலளித்தார்.


ஆசியக் கோப்பை: 


ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்த்து களமிறங்குகிறது. அதே நேரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை கண்டியில் எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.