2021-ம் ஆண்டு, சர்வதேச டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியதால் ரோஹித் கேப்டனாக்கப்பட்டார், ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிந்ததால் ராகுல் டிராவிட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்போற்று கொண்டது என முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனை அடுத்து, ஒரு நாள் கேப்டன்சியும் ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 


தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது.  டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.



இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது. 


அதனை அடுத்து, பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலி குறித்து பேசி இருக்கிறார். “இதுவரை, தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் இருந்து விலகுவதாக கோலியிடம் இருந்து எந்த கோரிக்கையும் பிசிசிஐயிடம் வைக்கப்படவில்லை. ஒரு வேளை அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலோ, வேறு சில காரணங்களால் விலகுவதாக இருந்தாலோ, அது பற்றி பின்னர் ஆலோசிக்கபப்டும். இப்போதைக்கு, தென்னாப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என்றே சொல்ல முடியும்” என தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க: Valimai Making Video | வெளியானது அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ! அதகளம் பண்ணும் அஜித் ரசிகர்கள்..


மேலும், இச்சம்பவம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அசாருதீன், “ரோஹித் ஷர்மா வரவிருக்கும் டெஸ்டில் விளையாட முடியாது என்றும் விராட் கோலி  ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஓய்வு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். இது பிளவுக்கான ஊகங்களை உறுதிப்படுத்துகிறது. கிரிக்கெட்டின் மற்றொரு வடிவத்தை இருவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண