இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மற்றும் பங்கேற்று வருகிறார். சர்வதேச அளவில் தோனியின் கடைசி போட்டி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியாக அமைந்தது. 


இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி(50) மற்றும் ரவீந்திர ஜடேஜா(77) ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் ஜோடியாக சேர்த்தனர். இதனால் கடைசி 2 ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 49ஆவது ஓவரை லாக்கி ஃபெர்குசன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை தோனி அசத்தலாக சிக்சருக்கு விரட்டினார். அதன்பின்னார் மூன்றாவது இரண்டு ரன்கள் எடுக்க தோனி முற்பட்டார். அந்த சமயத்தில் மார்டின் கப்டில் வீசிய த்ரோ நேரடியாக ஸ்டெம்பில் பட்டது. தோனி நூலிழையில் ரன் அவுட் ஆகினார். அதன்பின்னர் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 






இந்நிலையில் அந்த ரன் அவுட்டிலிருந்து தான் எப்படி வெளியே வந்துள்ளேன் என்பது தொடர்பாக தோனி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் அதை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அதன்படி,”நான் நிச்சயம் டைவ் அடித்திருக்க வேண்டும். அந்த ரன் அவுட் என்னுடைய வாழ்க்கையில் இன்று வரை மறக்க முடியாத வடுவாக அமைந்துள்ளது. இந்த ரன் அவுட் காயத்தை மறக்க நான் இந்திய ராணுவத்தில் என்னுடைய படைக்கு சென்றேன். 


அங்கு சில நாட்கள் பணியாற்றினேன். இந்திய ராணுவத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் அங்கு யாரும் என்னை ஹீரோவாக கருதவில்லை. அனைவரையும் என்னுடைய படை வீரர் எண்ணை வைத்து அழைப்பார்கள். அதனால் நான் எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். அனைவருக்கும் நான் ஒரு முறை ராணுவ பயிற்சி சென்றதுதான் தெரியும். இந்த முறை நான் என்னுடைய ராணுவ படைக்கு சென்றது யாருக்கும் தெரியாது. 




என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் டைவ் அடித்ததே இல்லை. ரன் அவுட்டில் தொடங்கிய என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ரன் அவுட்டில் முடிந்தது. நான் மட்டும் அன்று டைவ் அடித்திருந்தால் எல்லாம் மாற வாய்ப்பு இருந்திருக்கும். ஏனென்றால் கடைசி ஓவரை ஜிம்மி நீஷம் வீசுவார் என்பதை நன்றாக அறிந்து இருந்தேன். அதனால் தான் நான் ஜடேஜாவிடம் கடைசி ஓவரை முடிந்தவரை ஆட்டத்தை எடுத்து செல்வோம் என்று கூறினேன்” என தோனி தெரிவித்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.  மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகினார். தாகாவில் ரன் அவுட் உடன் தொடங்கிய தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் மான்செஸ்டரில் ரன் அவுட் உடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: தென்னாப்பிரிக்காவுக்கு டிக்கெட் போடுங்க... ஒரே சீசனில் 4 சதங்கள்... கோலி ரெக்கார்டை சமன் செய்த ருதுராஜ்