1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. கடந்த 26-ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாக உள்ளது.

  


`ஏக்தா டைகர்', `பஜ்ரங்கி பாய்ஜான்' படங்களை இயக்கிய கபீர்கான் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே டிரெண்டாகியது. இந்த டிரெயல்ர் குறித்தும் படம் குறித்தும் பலரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இப்படம் தொடர்பாக கபில்தேவ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பேசியுள்ளார். அதில், “83 படத்தின் ட்ரெய்லரை பார்த்து நான் மிகவும் உணர்ச்சி அடைந்தேன். அதன் ட்ரெய்லர் நன்றாக உள்ளது. எனினும் படம் எப்படி உள்ளது என்று பார்த்த பிறகே என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். படம் வெளியாகும் வரை நாம் சற்று காத்திருப்போம். ரன்வீர் சிங் ஒரு சிறப்பான நடிகர். அவருக்கு நான் எதுவும் கற்று தர தேவையில்லை. அவர் என்னிடம் சில நாட்கள் தங்கி என்னை பற்றி புரிந்து கொண்டு இந்தப் படத்தில் நடித்துள்ளார்” எனக் கூறியுள்ளார். 






இந்தத் திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா உட்பட பலரும் 1983-ஆம் ஆண்டு அணியின் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். கபில்தேவின் மனைவி வேடத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்