அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 


போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வலிமை படத்தின் அப்டேட் எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய் இப்போது அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரே அப்டேட்டாக வந்து குவிந்து கொண்டிருக்கிறது. 




தினம் தினம் ஒரு அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே வலிமை படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று மாலை வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


இதுகுறித்து சோனி மியூசிக் அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் “ஆர் வீ ரெடி? 5.30 மணிக்கு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும்” எனத் தெரிவித்திருந்தது. இந்த ,மேக்கிங் வீடியோவில் அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சிகளும் யுவனின்  மிரட்டல் பேக்கிரவுண்ட் இசையும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. 


இந்த அப்டேட்டை கண்ட ரசிகர்கள் போனிகபூருக்கு ட்விட்டரில் புகழாரம் சூட்டி மீம்ஸ்களையும் பறக்கவிட்டு வந்தனர். 






இந்நிலையில் அதன்படி வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண