ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள வாண்டரரஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகி இருந்த விராட் கோலி, அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.


இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக கோலி பங்கேற்க மாட்டார் என டாஸின்போது அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, கே.எல் ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார். மேலும், கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில், இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், ஜனவரி 11-ம் தேதி கேப் டவுனில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டி முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: Bhagyaraj Birthday: ‛அதுல என்ன சமாச்சாரம்னா...’ சமாச்சாரங்களின் சாம்ராஜ்யன் பாக்யராஜ் பிறந்தநாள்!



இந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். இது குறித்து பேசிய கே.எல் ராகுல், “விராட் உடல்நலம் தேறி வருகிறார். கடந்த இரு தினங்களாக அவர் வலைப்பயிற்சிக்கு அவ்வப்போது வந்து சென்றார். அவர் விரைவில் குணமடைவார்” என தெரிவித்தார்.


இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட், “விராட் விரைவில் குணமாக வேண்டும். அவ்வப்போது வலைப்பயிற்சிக்கு வருகிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என நினைக்கிறேன். இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், பிஸியோதெரபிஸ்ட்டிடம் பேசியதில் இருந்து விராட் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்பது தெரிகிறது” என தெரிவித்தார்.


கோலிக்கு பதிலாக யார் வெளியே செல்வது?


விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினால், இரண்டாவது டெஸ்டில் அவருக்கு பதிலாக களமிறங்கிய ஹனுமா விஹாரி மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப்படலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் விஹாரி, ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சீனியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், கோலி அணிக்கு திரும்பும்போது, யாருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்பது விரைவில் தெரிய வரும்,


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண