இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட்டின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் செய்யும் வல்லமை கொண்ட அவருக்கு,  சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


2012 ஆசிய கோப்பை:   2012-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில், ஆசிய கோப்பை போட்டியில்  இந்தியா - பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே பகலிரவு ஆட்டம் நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான நசீர் ஜாம்ஷெட் (112), முகமது ஹபீஸ்(105) ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். 330 ரன் என்ற கடினமான வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. வந்த வேகத்தில் கவுதம் கம்பீர் றன் எடுக்காமல் வெளியேறினார். ஆனால், அதிரடியாக ஆடிய கோலி, 22 பவுண்டரிகள் 1 சிக்சருடன்  183 ரன் விளாசினார். இமாலய இலக்கை இந்தியா எளிதில் கடந்தது. விளையாட்டில், தான் கண்ட ஆட்டங்களில் மிகச் சிறப்பான ஆட்டம் இதுதான் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முன்னதாக நினைவு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   


 



 


2016 டி 20 உலக கோப்பை தகுதிசுற்று போட்டி: 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் விராட் கோலி 51 பந்துகளில் 82* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்தார். 161 ரன்கள் என்ற கடினமாக இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வேகமாக வெளியேறினர்.


அதன்பின்னர் வந்த விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொண்டார். 



இந்தப் போட்டியில் 39 பந்துகளில் அரைசதம் கடந்த கோலி அதன்பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் ஐசிசியின் வாக்கெடுப்பில் 68 சதவிகிதம் வாக்குகள் பெற்று சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் விராட் கோலியின் இன்னிங்ஸிற்கு போட்டியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வேட் 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற இன்னிங்ஸ் இடம்பெற்று இருந்தது. 


2018 இங்கிலாந்து தொடர்: 


டெஸ்ட் கிரிக்கெட்டில் லாரா - மெக்ரத், சச்சின்- வார்னே, கோலி-ஆண்டர்சன் இடையேயான போட்டி அனைவரா லும் ரசிகர்களால் உற்றுபார்க்கப்படுகிறது.


 



 


2014ல் இங்கிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி  படுதோல்வியை சந்தித்தது. விராட் கோலிக்கும் இது மறக்கமுடியாத பயணமாகவே அமைந்தது. விளையாடிய 5 டெஸ்டுகளில் 134 ரன் மட்டுமே சேர்த்தார். இந்தத் தொடரில் நான்கு முறை ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டாகியது மட்டுமல்ல,  தன்னை முழுமையாக வீட்டுக் கொடுத்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆண்டர்சன் சொல்லி விக்கெட் எடுத்தது போல் இருந்தது.  ஆனால், அடுத்தடுத்த தொடர்களில், ஆண்டர்சன் பந்தை எதிர்கொள்ளும்  நுட்பத்தை மாற்றியமைத்தார். 2018 இங்கிலாந்து தொடரில் 2 சதங்கள், 3 அரை சதங்கள் விளாசினார். 
2016 முதல் ஆண்டர்சனின் 382 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒருமுறை கூட அவர் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


 



 


ஆஸ்திரிலேய காமன்வெல்த் முத்தரப்பு போட்டி:  2012ல், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு போட்டி தொடரில் இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில், 86 பந்தில் 133 ரன் குவித்தார். முதலில் ஆடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்  சேர்த்தது. ஆஸ்திரிலேயே அணியுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற, இந்தியா 40 ஓவரில் இலக்கை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், விராட் கோலி  36.2 ஓவரில் இலக்கை அடைய உதவினார். 


Virat kohli Captaincy Record: இப்படி ஒரு ஒப்பீடா... கபில்தேவ், தோனி வரிசையில் வித்தியாசமாய் இணைந்த கோலி!