வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.


இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அந்த அணி மட்டும் இல்லாமல் அந்த நாடே கொண்டாடி வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான் அணியை கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்:


இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் உஸ்மான் கவாஜா ஆப்கானிஸ்தான் அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 23) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”வெல்டன் தம்பி. இன்று நீங்கள் சிறந்த அணியாக உள்ளீர்கள். உங்கள் அணி வீரர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் உத்வேகமாக உள்ளனர். நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடியதை பார்க்க முடியாமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது” என்று கூறியுள்ளார். 


முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இருந்தது. இந்த போட்டிகள் ஆப்கானிஸ்தானில் நடைபெற இருந்த சூழலில் அங்கு தலிபான்கள் ஆட்சியில் இருப்பதால் போட்டியை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய அணி அறிவித்திருந்தது.






இதனைத்தொடர்ந்து இரு அணிகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நேரடியாக எந்த ஒரு தொடரிலும் விளையாடவில்லை. அதேநேரம் உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதும் சூழல் வந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இருந்தாலும் இன்றைய உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க: AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!


மேலும் படிக்க: IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!