IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Continues below advertisement

சூப்பர் 8 சுற்று:

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 22) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. சர் விவின் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Continues below advertisement

அதிரடி ஆட்டம்:

அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் கடந்த போட்டிகளில் சொதப்பினாலும் இன்றைய போட்டியில் அருமையான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 39 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். அப்போது ரோஹித் ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 11 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் ரன்கள் எடுத்தார். அப்போது ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

விராட் கோலியுடன் சேர்ந்து இவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்கள் எடுத்தார். இவரது விக்கெட்டிற்கு பின் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 சிக்ஸர் விளாசி நடையைக்கட்டினார். மறுபுறம் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசி கொண்டிருந்த ரிஷப் பண்ட் 36 ரன்களில் ரிஷத் ஹூசைன் பந்தில் விக்கெட்டானார்.

அந்தவகையில், 24 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசினார். பின்னர் வந்த ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினார்கள். 3 சிக்ஸர்கள் விளாசிய ஷிவம் துபே விக்கெட்டை பறிகொடுக்க ஹர்திக் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். அவர் கடைசி வரை களத்தில் நின்று 50 ரன்களை குவித்தார். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 196 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி வெற்றி:

வங்கதேச அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் களம் இறங்கினார்கள். இதில் லிட்டன் தாஸ் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் ஜோடி நிதானமாக விளையாடினாலும் ரன் ஏதும் பெரிதாக வரவில்லை. அப்போது 29 ரன்களில் தன்சித் ஹசன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 4 ரன்கள் எடுக்க ஷகிப் அல் ஹசன் 11 ரன்களில் நடையைக்கட்டினார். இதனிடையே ஓராளவிற்கு வங்கதேச அணிக்கு ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த நஜ்முல் ஹைசைன் சாண்டோ 40 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இவ்வாறாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது.

 

Continues below advertisement