அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, அமெரிக்காவுக்கு எதிராக 2 டி20, 3 ஒரு நாள் போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1 டி20, 2 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. 


இந்நிலையில், பல்வேறு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மத்தியில் நேற்று அயர்லாந்து அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. மிக பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. 


மேலும் படிக்க: 83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!


அதனை அடுத்து, இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய அயர்லாந்து அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்த அணி வீரர் லோர்கன் டக்கர் 84 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரில் பெரும் பங்காற்றினார். மற்ற பேட்டர்கள் சுமாரான ரன்களுக்கு வெளியேறினர். 






முதல் போட்டியை வென்றதை அடுத்து, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா களம் இறங்கியது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே ரன் எடுக்க திணறினர் அமெரிக்க பேட்டர்கள். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது அமெரிக்க அணி. ஜெயிக்க வேண்டிய போட்டியை கடைசி வரை இழுத்து அடித்து 9 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது அமெரிக்கா. 


இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், டி20 தொடர் டிரா ஆனது. அடுத்து  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்பமாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண