ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் நாக் அவுட் போட்டியாக மாறியுள்ள இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
கேப்டனை இழந்த டெல்லி அணி:
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்ற நிலையில், நான்காவது இடத்தை பிடிப்பதற்கு மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காய்ச்சல் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய டெல்லி கேப்டன் அக்சர் படேலுக்கு பதிலாக டூ பிளெசிஸ்-க்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி அணி விவரம்: டு பிளெசிஸ் (கேட்ச்), அபிஷேக் போரல் (w), சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்
மும்பை அணி விவரம்: ரியான் ரிக்கல்டன் (w), ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போவது யார்?
மும்பையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. எனவே, இன்றைய போட்டியின் நடுவே மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இன்றைய போட்டி மழையால் ரத்தானால், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளில் ப்ளே ஆஃப்க்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிப்பது பஞ்சாபின் கையில் அடங்கும். அந்த அணிக்கு எதிரான போட்டியின் முடிவைப் பொறுத்தே ப்ளே ஆஃப்க்குச் செல்லப்போவது யார்? என்பது தீர்மானிக்கப்படும்.
ஒரு வேளை இன்றைய போட்டி நடக்காமல் போனால் பஞ்சாப் அணியுடனான போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறும். இன்றைய போட்டி நடக்காத பட்சத்தில் பஞ்சாப் அணியுடனான போட்டியில் டெல்லி வெற்றி பெற்று, பஞ்சாப் மும்பையை வீழ்த்தினால் டெல்லி அணி ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெறும்.