வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயானஇரண்டாவதுடெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதில்,40 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை 1-0 என கைப்பற்றியது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை:
NO | அணிகள் | விளையாடியது | வெற்றி | தோல்வி | DRAW | POINT DEDUCTIONS | புள்ளிகள் | PCT |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | இந்தியா | 9 | 6 | 2 | 1 | 2 | 74 | 68.52 |
| 2 | ஆஸ்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 10 | 90 | 62.50 |
| 3 | நியூசிலாந்து | 6 | 3 | 3 | 0 | 0 | 36 | 50.00 |
| 4 | இலங்கை | 4 | 2 | 2 | 0 | 0 | 24 | 50.00 |
| 5 | தென்னாப்பிரிக்கா | 6 | 2 | 3 | 1 | 0 | 28 | 38.89 |
| 6 | பாகிஸ்தான் | 5 | 2 | 3 | 0 | 2 | 22 | 36.66 |
| 7 | இங்கிலாந்து | 13 | 6 | 6 | 1 | 19 | 57 | 36.54 |
| 8 | வங்காளதேசம் | 4 | 1 | 3 | 0 | 0 | 12 | 25.00 |
| 9 | வெஸ்ட் இண்டீஸ் | 9 | 1 | 6 | 2 | 0 | 20 | 18.52 |
இச்சூழலில் வங்கேதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தி அட்டவணையில் மாற்றம் ஏற்படும். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் ஆகஸ்ட் 30-ம் தேதியும் தொடங்குகிறது.
பாகிஸ்தான் தற்போது 36.66% புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Vinesh Phogat: வினேஷ் போகத்திற்கு தங்க பதக்கம்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கிராமத்தினர்!
மேலும் படிக்க: Jasprit Bumrah: பரபரப்பு.. கேப்டன் பதவி கேட்கும் ஜஸ்ப்ரித் பும்ரா! இந்திய அணியில் ட்விஸ்ட்