நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர்:
உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மட்டும் 14 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தியவர். அதேபோல் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றவார்.
இந்நிலையில் தான் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார் பும்ரா. இது தொடர்பாக அவர் பேசுகையில், "பந்து வீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், அவர்கள் தான் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் தான் போராட்டக் களத்தில் இருக்கிறோம்.
பந்துவீச்சாளர்கள் சாதூரியமானவர்கள்:
ஒரு போட்டியில் தோல்வி ஏற்பட்டால் பந்து வீச்சாளர்களை தான் அனைவரும் குறை சொல்வார்கள். அது மிகவும் கடினமான பணியாகும். கபில் தேவ் நமக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். இதை வைத்துப் பார்த்தாலே பந்துவீச்சாளர்கள் சாதூரியமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்" என்று பும்ரா கூறி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் மறைமுகமாக தன்னையும் கேப்டனாக்க வேண்டும் என சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் பதவியை அளிக்க வேண்டும் என பும்ரா கூறுவது முதல் முறை அல்ல. முன்னதாக 2023 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வென்ற போதும் அவர் இதே போன்ற கருத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். அதேபோல், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக ரோஹித் ஷர்மா வழி நடத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது.