ஐபிஎல் சீசன் 18:
ஐபில் சீசன் 18 அடுத்த ஆண்டு அதாவது 2025-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் நிலவுகிறது. இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது ஒரு சில அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அதேபோல் மற்றொரு முக்கிய கோரிக்கையும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சொல்லப்பட்டாதக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அன்-கேப்டு விதிமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டால் தோனி சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டு ஆனவர்களை ‘அன் கேப்ட்’ வீரராக அறிவிக்க உள்ளதாகவும், அப்படி அறிவித்தால் தோனியை சிஎஸ்கே அனி “அன் கேப்ட் பிளேயர்” பிரிவில் தக்கவைக்கும் எனவும் கூறப்படுகிறது.
அன் கேப்ட் பிளேயர் விதி:
இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார். அதில்,"எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது - நாங்கள் அதைக் கோரவில்லை - 'அன் கேப்ட் பிளேயர் விதி' வைக்கப்படலாம் என்று பிசிசிஐ எங்களிடம் கூறியது. அவ்வளவுதான் - அவர்கள் இன்னும் எதையும் அறிவிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார். ஒரு வேலை அன் கேப்ட் விதிமுறை வந்தால் தோனியை நிச்சயம் களத்தில் காணலாம் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Jay Shah:"நான் தான் காரணம்" ஆனாலும் ஜெய்ஷா ரொம்ப ஸ்டிரிக்ட்!
மேலும் படிக்க: Punjab Kings: பஞ்சாப் கிங்ஸின் பங்கு யாருக்கு? ப்ரீத்திக்கு குட் நியூஸ் வருமா?