19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக் சந்த், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபல பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பிக் பாஷ் லீகின் 2021-2022 ஆண்டு தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


28 வயதான் உன்முக் சந்த், இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு, அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். 2012-ம் ஆண்டு U-19 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வழிநடத்திச் சென்ற உன்முக் சந்த், சீனியர் கிரிக்கெட் அணியில் இடம் பெறவில்லை. சீனியர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடாத அவர், டெல்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார்.


மேலும் படிக்க: 30 Years of Thalapathi: “இது சூர்யா சார் நெருங்காதிங்க”.. தமிழ் சினிமாவின் ஒற்றை தளபதி.!


இந்நிலையில், ஆஸ்திரேலியா பிக் பாஷ் லீகில் விளையாட இருக்கும் அவர், மெல்போர்ன் ரெனிகார்ட்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.






நவம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் அவர், பிக் பாஷ் லீகின் முழு தொடரில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய வீரர் ஆரன் ஃபின்ச் தலைமையில் விளையாட இருக்கும் உன்முக் சந்த் இடம் பெற்றிருக்கும் அணியில், ஷான் மார்ஷ், கேன் ரிச்சார்ட்சன், ஜேம்ஸ் பாட்டின்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண