டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இரண்டாவது போட்டியில், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், துபாய் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.


முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினர் இந்திய பவுலர்கள். இந்திய பவுலர்களைப் பொருத்தவரை முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் எடுத்துள்ளது. எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய  இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறது. 7.1 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், 2 புள்ளிகள் கிடைப்பதோடு ரன் ரேட்டிலும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். 






இந்திய அணி பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சியால், ஸ்காட்லாந்து அணி தொடக்கம் முதலே திணறியது. இதை பயன்படுத்தி கொண்ட இந்திய அணி, ஸ்காட்லாந்தை ஆல் அவுட் செய்யும் முனைப்பிலேயே விளையாடியது. மேலும் இந்த போட்டியில் விக்கெட் எடுத்தது மூலம், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார் பும்ரா.










மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண