தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்துள்ள 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா ஆறாவது முறை வென்றதுடன் எல்லா அணியில் இருந்தும் பல சிறந்த வீரர்கள் தங்கள் சிறப்பான செயல்பாட்டை தந்தனர். ஆனால் திடீரென புதிதாக ஒரு எரிமலை போல வெடித்த சில வீரர்கள் எதிரணியை பெரிதகா அச்சுறுத்தினர். போட்டியை மாற்றும் ஆட்டத்தை ஆடிய அதுபோன்ற வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.
மருஃபா அக்டர் - வங்கதேஷம்
ஜனவரியில் நடந்த ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் நட்சத்திரங்களில் ஒருவரான மருஃபா, இந்த உலகக்கோப்பையிலும் சிறந்த செயல்திறனுடன் அதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் திறனைக் காட்டினார். வேகமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான அவர், ஆரம்பகால பவர்பிளே ஓவர்களில் தொடர்ந்து விக்கெட் வீழ்த்தும் அச்சுறுத்தலாக இருந்தார் மற்றும் பங்களாதேஷின் தாக்குதலுக்கு ஒரு தீப்பொறியாக செயல்பட்டார். அவர் இலங்கையுடனான போட்டியில் மிடில் ஆர்டரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளேயில் மட்டுமே மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்த அதிரடி தாக்குதலால்தான் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் பெத் மூனியின் முக்கியமான விக்கெட்டை எடுத்தார். வெறும் 18 வயதே ஆன மாருஃபாவின் திறமைதான் பலரை ஆச்சர்யப்படுத்துகிறது.
ஓர்லா பிரெண்டர்காஸ்ட் - அயர்லாந்து
அயர்லாந்தின் 20 வயது ஆல்ரவுண்டர் உலகக்கோப்பையில் அவர்கள் அணியின் செயல்பாட்டில் தனித்து நின்றார். ஐசிசி அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு தாக்கம் பெரிதாக இருந்தது. 20 வயதான அவர் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார். அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் எடுத்த நிலையில், மொத்தம் 109 ரன்கள் எடுத்து களத்தில் சிறப்பாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி அயர்லாந்தின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்தார். அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளுமே ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா மற்றும் சோபியா டன்க்லே என்ற பெரிய விக்கெட்டுகள் என்பதுதான் அதில் ஹைலைட்.
முனீபா அலி - பாகிஸ்தான்
பாகிஸ்தானின் கண்ணாடி அணிந்த பேட்டர் முனீபா அலி T20 வடிவத்தில் தனது பெல்ட்டின் கீழ் நிறைய சர்வதேச அனுபவங்களைக் கொண்டுள்ளார், ஆனால் இந்த போட்டியில்தான் தன்னை ஒரு உயர்மட்ட வீரராக கிரிக்கெட் உலகிற்கு அறிவித்தார். அயர்லாந்திற்கு எதிராக பாகிஸ்தான் வெற்றிபெற முனிபா அலியின் அடித்த சதம் மிகப்பெரிய விஷயமாக பாராட்டப்படுகிறது. மேலும் அத்தகைய திறமையான பேட்டருக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர் 102 ரன் எடுத்ததே உலகக் கோப்பையின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும், ஆனால் அதே ஃபார்மை மீண்டும் தொடர முடியாமல் கடைசி இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்களையே குவித்தார்.
ஹர்ஷிதா சமரவிக்ரம – இலங்கை
சாமரி அதபத்துவின் தோள்களில் இருந்து சுமையை குறைக்க விதமாக இவரது இருப்பு இருந்தது. சமரவிக்ரம இலங்கைக்கு ஒரு பெரிய போட்டியில் தனது அணிக்கு தேவைப்படும் நேரத்தில் எழுந்து நின்றார். பங்களாதேஷுக்கு எதிராக 127 ரன்களை சேஸ் செய்யும்போது, மரூஃபா டாப் ஆர்டரைக் துவம்சம் செய்த நிலையில், சமரவிக்ரம மட்டுமே நிலைத்து ஆடினார். அதுமட்டுமின்றி தேவையான ரன் ரேட் அழுத்தத்தை குறைக்க உதவினார். "இது ஒரு சிறந்த ஆட்டமாகும், மேலும் அவர் 50 பந்துகளில் 69* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்", என்று சஞ்சனா கணேசன் புகழ்ந்தார். 24 வயதான அவர், சாம்பியன் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி, தனது அணிக்கு ஓரளவு டிஃபண்ட் செய்யுமளவிற்கான ஸ்கோரை தந்தார்.
கரிஷ்மா ராம்ஹரக் - வெஸ்ட் இண்டீஸ்
28 வயதாகும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வலது கை ஆஃப் ஸ்பின்னர் ராம்ஹரக் சர்வதேச மட்டத்தில் ஒப்பீட்டளவில் அனுபவம் இல்லாதவர், ஆனால் ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் பந்துவீச்சு தாக்குதலில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார். மிகவும் டைட்டாக பந்து வீசும் அவர், அவரது புத்திசாலித்தனமான சுழலுடன் எதிரணிக்கு அச்சுறுத்தலை வழங்குகிறார். அவர் தொடரில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். அவரது தரமான ஆட்டத்தால் ஐசிசி அணியிலும் இடம் கிடைத்தது.