பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 


சாதனைக்காக காத்திருக்கும் ரோகித், கோலி:


இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தூண்களாக உள்ளனர். கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்டில் சதம் அடிக்கவில்லை என்றாலும், டெல்லி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டார். அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தனது அணிக்காக சதம் அடித்தார். தற்போது நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தான் அதிக ரன் குவித்துள்ளார். ரோகித் 3 இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.


சர்வதேச அளவில் அதிவேகமாக 25,000 ரன்களை கடந்த விராட் கோலி, இந்திய மண்ணில் 4000 ரன்களை கடக்க இன்னும் 77 ரன்கள் மட்டுமே உள்ளது. அதேபோல், ரோகித் மற்றும் கோலி ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடியாக 1,000 ரன்களை முடிக்க 44 ரன்கள் மட்டுமே உள்ளது. தொடர்ந்து, ரோகித் சர்மா ர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டுவதற்கு 45 ரன்கள் மட்டுமே உள்ளது. இதை ரோகித் சர்மா இன்று எட்டினால் சச்சின் டெண்டுல்கர், கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி , வீரேந்திர சேவாக் போன்ற வீரர்களுக்கு 17,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்டின் நேரடி ஒளிபரப்பை எப்போது, எங்கு பார்க்கலாம். 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் 3வது டெஸ்ட் போட்டி எப்போது?


மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல் மார்ச் 5, 2023 வரை நடைபெறும்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறும்?


 இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்? 


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியை நான் எங்கே பார்க்கலாம்?


இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் டிடி ஃப்ரீ டிஷில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த கேம் Disney+Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.


இந்திய அணி:


 ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சேதேஷ்வர் புஜாரா, ஸ்ரீகர் பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்


ஆஸ்திரேலிய அணி:


ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஸ்காட் போலண்ட், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, டாட் மர்பி, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், மிட்செல் ரீஷா, மேட்த்ன்ஷாவ் , மேட்த்ன்ஷாவ் குஹ்னேமன்