தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமாகிய மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாப்படுகிறது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் இப்போது முதலே கொண்டாடி வருகின்றனர். 1953ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிறந்த மு.க.ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதையை கீழே காணலாம்.
- 1967ம் ஆண்டு முரசொலி மாறனுக்காக தன்னுடைய 14 வயதில் முதன்முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
- 1968ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணியைத் தொடங்கினார்.
- 1973ம் ஆண்டு தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார்.
- 1976ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அரசியல் வாழ்வில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
- 1984ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
- 1989ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு தேர்வானார்.
- அந்த ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால் 1991ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
- 1996ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கிய மு.க.ஸ்டாலின் மாபெரும் வெற்றி பெற்று அசத்தினார்.
- 1996ம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டு வரை மேயராக பொறுப்பு வகித்தார்.
- 2001ம் ஆண்டு மீண்டும் சென்னை மாநகர மேயராக தேர்வானார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்ததால் மேயர் பதவியை ராஜினாமா செய்து, எம்.எல்.ஏ.வாக தொடர்ந்தார்.
- 2006ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. 2006ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வான மு.க.ஸ்டாலின், முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்தார்.
- 2006-2011ம் ஆண்டு வரை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
- அந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பொறுப்பு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.
- 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தாலும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
- 2015ம் ஆண்டு மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- 2016ம் ஆண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- கருணாநிதியின் மறைவுக்கு பிறகு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி தி.மு.க. தலைவராக பதவியேற்றார்.
- கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் களமிறங்கிய தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே 7-ந் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.