டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இதனைத்தொடர்ந்து 20 அணிகள் பங்குபெறும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது இந்த தொடர்.


இதில் முதல் போட்டி ஜூன் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. அதன்படி இந்திய அணி விளையாடும் முதல் போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.


இந்தியா - பாகிஸ்தான்:


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.  நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதுவதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிகிறது. 


டிக்கெட் விலை:


நியூயார்க் நகரில் நடைபெறும் போட்டியை நேரடையாக பார்ப்பதற்கான ஒரு டிக்கெட் விலை மறுவிற்பனையில் ஒரு நபருக்கு அதிகபட்சம் US $ 2,500 இந்திய ரூபாய் மதிப்பில் 200,000. அதேபோல் நான்கு நபருக்கு 850,00 ரூபாய் என்ற அடிப்படையில் விற்கப்படுகிறது.


அதேநேரம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் முன்னதாகவே விற்றுத்தீர்ந்து விட்டது. மறுவிற்பனை சந்தையில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. 


இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன் 2007 (இறுதிப் போட்டி உட்பட), 2012, 2014, 2016, 2021, மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 2009ஆம் ஆண்டு மட்டும் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.  


மேலும் படிக்க: MS Dhoni: CSK ரசிகர்கள் நெஞ்சில் விழுந்த இடி..RCB க்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டாரா?


மேலும் படிக்க: CSK: தோனின்னு சொன்னாலே அப்செட்.. ஜடேஜாவை போட்டுக்கொடுத்த முன்னாள் சி.எஸ்.கே வீரர்!