Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை வழங்கி கெளரவித்தது.

Continues below advertisement

உற்சாக வரவேற்பு:

ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 4) வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸில் இருந்து இந்திய அணி நாடு திரும்பியது.

Continues below advertisement

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் அவருடன் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து மாலை 7 மணியளவில் டெல்லியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது அவர்கள் வந்த விமானத்திற்கு தண்ணீர் சல்யூட் அடித்து வரவேற்கப்பட்டது.

125 கோடி பரிசு:

பின்னர் அங்கு இருந்து வான்கடே மைதானம் நோக்கி உலகக் கோப்பை வெற்றிப்பேரணி தொடங்கியது. சாலை முழுவதும் கூடியிருந்த மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் சூழ இந்திய அணி வீரர்கள் திறந்த பேருந்தில் பேரணியாக வந்தனர். பின்னர் வான்கடே மைதானத்திற்கு வந்தடைந்தனர். 

இந்நிலையில் வெற்றி குறித்தும் ரசிகர்கள் குறித்தும் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் பேசினர். இதனைத்தொடர்ந்து பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகையாக அறிவித்திருந்த 125 கோடி ரூபாயை வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Team India Victory Parade: உலகக் கோப்பை வெற்றி பேரணி.. இடையே வந்த ஆம்புலன்ஸ்.. ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

 

மேலும் படிக்க: Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

Continues below advertisement