மும்பை வான்கடே மைதானம் நோக்கி இந்திய கிரிக்கெட் வீரர்கள் திறந்த பேருந்தில் பேரணி செல்கின்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பையிம் சாம்பியன் பட்டத்தை வென்றது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்திய அணியின் இந்த வெற்றியை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை வாழ்த்தினார்கள். இதனிடையே இந்திய அணி வீரர்கள் இன்று (ஜூலை 4) டெல்லிக்கு வந்தனர்.
ரசிகர்கள் கூட்டம்:
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய அணி வீரர்கள் பிரதமரிடன் உலகக் கோப்பையை கொடுத்தனர். அதை சந்தோசத்துடன் வாங்கி பார்த்தார் பிரதமர் மோடி. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமருடன் குழு புகைப்படம் மற்றும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மும்பை வான்கடே மைதானம் நோக்கி இந்திய கிரிக்கெட் வீரர்கள் திறந்த பஸ்ஸில் பேரணி சென்றனர். பேரணி செல்வதற்கு முன்பு மும்பையில் கனமழை பெய்தது. அப்படி இருந்தும் மழையை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் பேரணி கலந்து கொண்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோடு இரவு 7 மணிக்கு பிசிசிஐ இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரிசுத்தொகை கொடுத்து கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும் படிக்க: Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
மேலும் படிக்க: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!