மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை நேற்று வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் உலக அளவில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணி எதிரணிகளை வீழ்த்தி தொடரை ஒயிட்வாஷ் செய்வதில் இதுவரை திறன்பட செயல்பட்டுள்ளது.




2006ம் ஆண்டு முதல் இந்தியா டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறது. இந்திய அணி நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடர் உள்பட இதுவரை 57 டி20 தொடர்களில் ஆடியுள்ளது. இவற்றில் 30 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் 8 தொடர்களை டிரா செய்துள்ளது. இவற்றில் 17 தொடர்களை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது.


இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்கா அணியை 2 முறையும், ஆஸ்திரேலியா அணியை 3 முறையும், இலங்கை அணியை 5 முறையும், ஜிம்பாப்வே அணியை 1 முறையும், மேற்கிந்திய தீவுகள் அணியை 3 முறையும், அயர்லாந்து அணியை 1 முறையும், நியூசிலாந்து அணியை 2 முறையும் ஒயிட்வாஷ் செய்துள்ளது.




இதில், நியூசிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணி, அயர்லாந்து அணி, இலங்கை அணி, ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரிக்க அணிகளை அவர்களது சொந்த மண்ணிலே ஒயிட்வாஷ் செய்தும் இந்தியா சாதனை படைத்துள்ளது.  முன்னணி அணிகளை எல்லாம் ஒயிட்வாஷ் செய்துள்ள இந்திய அணி இதுவரை இங்கிலாந்து அணியை மட்டும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒயிட்வாஷ் செய்தது கிடையாது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 6 முறை டி20 தொடர்களில் ஆடியுள்ளது. இவற்றில் 2 முறை இங்கிலாந்து அணியும், 3 முறை இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொடர் டிரா ஆகியுள்ளது. இதில், இங்கிலாந்து அணிதான் இந்தியாவை 2 முறை ஒயிட்வாஷ் செய்துள்ளது. 




ஐ.சி.சி. தரவரிசைப்படி இந்தியா தற்போது டி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரத்து 703 புள்ளிகளுடன், 264 ரேட்டிங்குடனும் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து அணி 9 ஆயிரத்து 44 புள்ளிகளுடனும், 278 ரேட்டிங்குடனும் முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான், நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணிகள் உள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ”மேம்படும் ராமேஸ்வரம் ரயில் நிலையம் ; தொலைதூர ரயில் ரத்து” : தெற்கு ரயில்வே அப்டேட்