ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டும் 15 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், இந்திய அணி ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக ஒருநாள் போட்டி வெற்றியை பெற்றது என்ற பெருமையை ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்றுள்ளது.




கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்திய அணி தொடர்ந்து 15 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து 12 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க : IND vs ZIM, Match Highlights: பயம் காட்டிய சிகந்தர் ராஸா... கடைசியில் போராடி ஒயிட்வாஷ் செய்த இந்தியா..


நியூசிலாந்து அணிக்கு எதிராக 1986ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.




இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் இதுவரை 66 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அவற்றில் 54 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்காக அதிகபட்சமாக ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1377 ரன்கள் விளாசியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் 1298 ரன்கள் விளாசியுள்ளார். இந்திய அணிக்காக அஜீத் அகர்கர் 45 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரைக் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


மேலும் படிக்க : Sikandar Raza: இறுதிவரை இந்திய அணிக்கு அச்சுறுத்தல்..! பேட்டிங்கில் மிரட்டிய சிக்கந்தர் ராஸா யார்..?


மேலும் படிக்க : IND vs ZIM, Match Highlights: பயம் காட்டிய சிகந்தர் ராஸா... கடைசியில் போராடி ஒயிட்வாஷ் செய்த இந்தியா..