ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் நேற்று டெல்லி திரும்பினர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
125 கோடி பரிசுத்தொகையை பெற்ற இந்திய அணி வீரர்கள்:
டெல்லியில் இருந்து மும்பைக்கு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து டிரைவ் மெரைன் வழியாக வான்கடே மைதானம் நோக்கி லட்சக்கணக்கான ரசிகர்கள் படை சூழ உலகக் கோப்பை வெற்றி பேரணியை மேற்கொண்டனர் இந்திய அணி வீரர்கள். மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாரட்டு விழா மற்றும் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகையை பிசிசிஐ வழங்கியது.
முதல்வரை சந்தித்த மும்பை வீரர்கள்:
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடன் இந்திய அணி வீரர்களான (மும்பையை சேர்ந்தவர்கள்) சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஸஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் சென்றனர்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விநாயகர் சிலையை வீரர்களுக்கு பரிசாக அளித்தார். இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய சூர்யகுமார் யாதவின் கேட்சை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வெகுவாக பாராட்டினார்.
சட்டமன்றத்தில் பேசிய ரோஹித் ஷர்மா:
இதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற நான்கு மும்பை வீரர்களுக்கும் மும்பையில் உள்ள மகாராஷ்டிர விதான் பவன் வளாகத்தில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் சட்டமன்றத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உரையாற்றினார்.
மேலும் படிக்க: TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
மேலும் படிக்க: Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா