நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அதில் இந்திய அணி குரூப் 2-வில் இடம்பெற்று விளையாடி வருகிறது. குரூப் 1-இல் எல்லா அணிகளும் ஒருவரை ஒருவர் வென்று இழுபறி நீடித்து வரும் நிலையில், நியூசிலாந்து மட்டும் 3 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தானை தவிர மற்ற அணிகள் 2 புள்ளிகளுடன் கடும் போட்டியில் உள்ளன.



குரூப் 2 வில் இந்திய அணியின் நிலை


க்ரூப் 2-வில் எல்லா அணிகளும் இரண்டு போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் ஓரளவுக்கு யார் உள்ளே செல்வார்கள் என்பது புரிய வந்துள்ளது. இரண்டு போட்டிகளையும் வென்று முதல் இடத்தில் +1.425 ரன் ரேட்டுடன் பலமான இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு கிட்டத்தட்ட அரையிறுதி உறுதியாகி உள்ளது. ஆனால் இரண்டிலும் தோற்ற பாகிஸ்தான் அணிக்கும் எப்படி உள்ளே செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.


தொடர்புடைய செய்திகள்: லட்சுமி, விநாயகர் வேண்டாம்....ரூபாய் நோட்டில் மோடி படத்தை அச்சிடுங்கள்... ஃபோட்டோஷாப் புகைப்படத்துடன் பாஜக எம்எல்ஏ ட்வீட்!


தெ. ஆப்ரிக்கா - ஜிம்பாப்வே


தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில் இரு அணிகளும் 3 புலிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அதில் தென் ஆப்பிரிக்க அணி +5.200 ரன் ரேட்டுடன் முன்னிலையில் உள்ளது. அதனால் பாகிஸ்தானை வென்ற ஜிம்பாப்வே அணி தகுதி பெற குறைந்தது அடுத்த இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டும், அல்லது மூன்றையும் வெல்ல வேண்டும்.



பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கிறதா?


பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும், இரண்டுமே கடைசி ஓரிரு பந்துகளில் அமைந்தது அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை இன்னும் பிடித்து வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்தில் தொடங்கி, நவம்பர் 3, வியாழன் அன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இறுதியாக நவம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷுக்கு எதிராக மோதவுள்ள எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவதே பாகிஸ்தான் அணியின் முதல் பணியாகும். அதற்கு மேல் பாகிஸ்தானின் கைகளில் இல்லை. ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றால், அவர்கள் ஐந்து புள்ளிகளுடன் பாகிஸ்தானுக்கு பின்னால் தள்ளப்படுவார்கள். வங்கதேசம் போட்டிக்கு வர வாய்ப்புண்டு அந்த அணியும் ஒரு போட்டியில் தோற்றால், பாகிஸ்தான் எளிதில் உள்ளே செல்லும், ஏனெனில் வங்கதேசம் ரன் ரேட்டில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது பாகிஸ்தான் அணிக்கு மேலும் பலம். இதற்கெல்லாம் இடையில் மழை ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.