டி 20 தொடர்:


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதன்படி, இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றனர். அதேநேரம், முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடினார். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விளையாடவில்லை. இதனிடையே உலகக் கோப்பை டி20 போட்டியில் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடக்க ஆட்டக்காரர்கள்:


முன்னதாக ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். இதனால் ரோகித் மற்றும் கோலி இருரையும் டி20 உஅல்கக் கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறக்குவதற்கான திட்டம் இருப்பதாக ராகுல் ட்ராவிட் தெரிவித்திருந்தார். குறிப்பாக விராட் கோலி ஐபிஎல் தொடரில் இதற்கு முன் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே அவர்களை ஆரம்பத்திலேயே இறக்கி எதிரணிகளை அட்டாக் செய்யும் எண்ணம் தங்களிடம் இருப்பதாக ட்ராவிட் கூறிருந்தார்.


கோலி 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்:


இந்நிலையில், இந்த திட்டம் சரியானதல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நான் விராட் கோலி 3- வது இடத்தில் பேட்டிங் செய்வதையே விரும்புகிறேன். ஏனெனில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கும்போது உங்களுக்கு இடதுவலது கை ஓப்பனிங் ஜோடி கிடைக்கும். இதற்கு முன் நாம் கம்பீர்சேவாக் அல்லது சச்சின்கங்குலி ஆகியோர் அந்த கலவையில் வெற்றிகரமாக விளையாடியதை பார்த்துள்ளோம். அத்துடன் இருவருமே அட்டாக் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள். மறுபுறம் விராட் கோலி 3-வது இடத்தில் விளையாடினால் இந்திய பேட்டிங் திடமாக இருக்கும்.


அவர் எப்போதும் ரன்கள் ஓடி ஸ்கோர்போர்டை நகர்த்திக் கொண்டே இருப்பார். எனவே அவர் தான் 3வது இடத்திற்கு சரியானவர் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் அணி நிர்வாகம் ஜெய்ஸ்வாலை 3வது இடத்தில் களமிறக்கலாம். இருப்பினும் இளம் வீரராக இருக்கும் ஜெய்ஸ்வால் தொடக்க  வீரராக விளையாடினால் அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Team India T20 Squad: விராட் கோலியின் நரம்புகள் முழுவதும் கிரிக்கெட்தான்... டி20 அணிக்கு திரும்பியதற்காக புகழ்ந்த டி வில்லியர்ஸ்..!


மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!