இந்திய டி20 அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பியது தொடர்பான வாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இரு ஜாம்பவான்களின் ரீ-எண்ட்ரி குறித்து கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் ஒரு கருத்து தெரிவித்து, இந்திய அணியின் இந்தத் தேர்வில் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய டி வில்லியர்ஸ், ”எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் சிறந்த அணியை அனுப்புவதன் மூலம் டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறீர்கள். இப்படியான சூழ்நிலையில், இது இப்படிதான் இருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து டி20 விளையாடி வரும் இளைஞர்கள் மற்றும் வீரர்களிடம் இருந்து வாய்ப்பு பறிபோய்விட்டதாக விமர்சனம் இருப்பதையும் புரிந்துகொள்கிறேன். ” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், ​​”எனது கேரியரின் முடிவில் எனது நிலைமை இப்படித்தான் இருந்தது. இத போன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், விராட் மற்றும் ரோஹித்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது சரியான முடிவு. உங்கள் அனுபவமிக்க வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நம்பலாம்.” என்றார்.  






விராட் கோலி ஒரு உணர்ச்சிமிக்க கிரிக்கெட் வீரர்:


விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து பேசிய டிவில்லியர்ஸ், “விராட் கோலியின் நரம்புகளிலேயே கிரிக்கெட் உள்ளது. இதுவே அவருக்கு உத்வேகம் தருகிறது. இந்த ஆர்வத்தினால் நானும் தொடர்ந்து விளையாடினேன். என்னிடம் இருந்த நெருப்பு குளிர்ச்சியடைவதை உணர்ந்த நாள், நான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். விராட் கோலி வாழ்க்கையில் நல்ல சமநிலையைப் பேணி வருகிறார். கிரிக்கெட்டுடன் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுகிறார். எனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் என்னால் செய்ய முடியாமல் போனநிலையில், அவர் தனது கேரியரை மிகச் சிறப்பாக நிர்வகித்திருக்கிறார்.” என்றார். 


1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள ஏபி டி வில்லியர்ஸ்:


மொஹாலி டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆனால், 14 மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்கு திரும்பிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பூஜ்ஜியத்தில் அவுட்டானார். சுப்மன் கில் 12 பந்துகளில் 23 ரன்களும், திலக் வர்மா 22 பந்துகளில் 26 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஷிவம் துபே 60 ரன்களிலும், ரிங்கு சிங் 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.