எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.


இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி  அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.


இன்றைய ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.


சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து, இங்கிலாந்து அணியிடம் மட்டும் தோல்வியைத் தழுவியது. ஆப்கனுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது.


இதுவரை 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. 


சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் மோசமான ஆட்டத்திறனுடன் கேன் வில்லியம்சன் இருந்தார். எனினும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஃபார்முக்குத் திரும்பினார்.


6 முறை அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 2009இல் சாம்பியன் ஆனது.  இதுவரை 6 முறை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை மீண்டும் சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்புடன் அந்த அணி விளையாடும். பாகிஸ்தானுக்கு பலமே பந்துவீச்சு தான். சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.


இதுவரை நேருக்கு நேர்
இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 11 ஆட்டங்களில் நியூசிலாந்தும், 17 ஆட்டங்களில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.


Suryakumar Yadav T20 Record: ஓராண்டில் 1000 ரன்கள்..! ரிஸ்வானை விட சூர்யகுமார்யாதவ்தான் பெஸ்ட்..! டேட்டா ரிசல்ட்..


மைதானம் எப்படி?
போட்டி நடக்கக்கூடிய சிட்னி மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளம் ஆகும். இந்த உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் நடந்த 6 ஆட்டங்களில் 5 இல் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மழை இருக்குமா?
சிட்னி மைதானத்தில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மதியம் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் கூட இன்றை ஆட்டம் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படும்.


இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:


பாகிஸ்தான்
முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.


நியூசிலாந்து
பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்),  கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், சான்ட்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், சோதி, லோக்கி பெர்குசன்.


ஆட்டம் எத்தனை மணிக்கு?
இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது.