உலககோப்பை டி20 மகுடத்தை கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கப் போகும் முதல் அரையிறுதிப் போட்டி நாளை புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டி நடைபெற உள்ள சிட்னி மைதானம் பற்றி கீழே விரிவாக காணலாம்.


உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னி மைதானத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த மைதானத்தில் 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், முதலில் பேட் செய்த அணி 10 முறையும், இரண்டாவது பேட் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.




சிட்னி மைதானத்தில் டாஸ் வென்ற அணி 8 முறையும், டாஸ் தோற்ற அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கக்கூடிய சிட்னி மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு எதிராக 221 ரன்களை விளாசியுள்ளது. குறைந்தபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக வங்காளதேசம் 101 ரன்களை எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 200 ரன்களை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சேஸ் செய்து அசத்தியுள்ளது.  இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 168 ரன்களை எடுத்துள்ளது.


பாரம்பரியான சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியை காண்பதற்காக இரு நாட்டு ரசிகர்களும் குவிவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 28 முறை டி20 போட்டியில் மோதியுள்ளனர். இதில், நியூசிலாந்து 11 முறையும், பாகிஸ்தான் 17 முறையும் வெற்றி பெற்றுள்ளது.  


மேலும் படிக்க : IND vs ENG T20 WC Semi Final: "டாஸ் தோற்றால் மேட்ச் ஜெயிக்கலாம்.." அடிலெய்டில் இப்படி ஒரு ராசியா..! வியக்கும் ரசிகர்கள்...


மேலும் படிக்க : T20 World Cup 2022: சூர்யகுமார் யாதவ் மட்டும் இல்லைன்னா, இந்திய அணி நிலைமை இதுதான்.. ஓபனாக பேசிய கவாஸ்கர்!