டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. 


இந்நிலையில் சூப்பர் 12 சுற்றின் இரண்டாவது போட்டியில் இன்று இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரராக இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இஷான் கிஷன் 4 ரன்களில் பொல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 




இதைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக ரோகித் சர்மா களமிறங்கினார். இஷான் கிஷானை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. அதன்பின்னர் ரோகித் சர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சற்று முன்பு வரை இந்திய அணி 5 விக்கெட் இழந்து 70 ரன்கள் எடுத்து சற்று தடுமாறி வருகிறது. 


 






இந்தச் சூழலில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2013ஆம் ஆண்டிற்கு பிறகு ரோகித் சர்மா தற்போது தான் மூன்றாவது முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. அவர் இதற்கு முன்பாக 3ஆவது இடத்தில் களமிறங்கிய போது ஒரு முறை ரன் எதுவும் எடுக்காமலும், மற்றொரு முறை 60* ரன்களும் எடுத்தார். இன்றைய போட்டியில் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 


 






ரோகித் சர்மாவை எதற்காக தொடக்க ஆட்டக்கரராக களமிறக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரைவிட கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் அதிக முறை ஆடியுள்ளார். அப்படி இருக்கும் போது எதற்காக அவரை மிடில் ஆர்டரில் களமிறக்காமல் ரோகித் சர்மாவை களமிறக்கினீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


மேலும் படிக்க: மறக்க முடியல.. இப்படி ஒன்னு தல தோனிக்கு நடக்காமயே போய்ட்டே.! கலங்கிய ரசிகர்கள்.!