T20 World Cup 2024 super 8: டி20 உலகக் கோப்பையில் இன்று (ஜூன் 14) நடைபெறும் போட்டியில் அமெரிக்க அணி தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும். 


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றிருக்கிறது.


கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.  அதேபோல் ஐசிசி அணிகளில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் நியூசிலாந்து அணியும் எலிமினேட் ஆகிவிட்டது. இங்கிலாந்து அணியும் தள்ளாடிக்கொண்டு தான் இருக்கிறது. 


என்னவாகும் பாகிஸ்தான் நிலை?


பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்பது இன்றைய போட்டியின் முடிவை பொறுத்துத்தான் அமையும். அதாவது இன்று (ஜூன் 14)  நடைபெறும் 30 வது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாட இருக்கிறது.


இந்த போட்டியில் அமெரிக்க அணி தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். ஏனென்றால் இதுவரை அமெரிக்க அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணியையும் அமெரிக்கா வீழ்த்தி இருந்தது. 


மழையால் போட்டி ரத்தானால்:


அதேநேரம் பாகிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மாறாக இந்திய அணியின் வெற்றியால் ரன் ரேட்  +0.191  பாகிஸ்தான் அணி அமெரிக்காவை விட அதிகம் பெற்றுள்ளது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி ஒரு வேளை மழையால் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கான சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.


அமெரிக்க அணி தோல்வி அடையும் பட்சத்தில் தாங்கள் விளையாடும் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும். அதனால் இன்று நடைபெறும் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் படிக்க: ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை


மேலும் படிக்க: AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்