‘தோனி பாய் வலிமையாக உள்ளீர்கள்’ என பாகிஸ்தான் வீரர் கூற, அதற்கு தோனி அளித்த பதில் உள்ளிட்ட மொத்த வீடியோவும் சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


ஏழாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


Ind vs Pak, T20 WC LIVE: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்


 




இந்தப் போட்டிக்காக இருநாட்டு அணி வீரரகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய பயிற்சியின்போது, தோனி சென்றுக்கொண்டிருக்கையில், அப்போது அவரை பார்த்த பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி, உங்கள் உடல் வலிமையாக இருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறினார். அதற்கு தோனி, தனக்கு வயதாகிவிட்டது என்று காமெடியாக கூறுகிறார். மறுபடியும் அந்த வீரர், இல்லை, தாங்கள் முன்பைவிட வலிமையுடன் உள்ளீர்கள் என்று சொல்ல, தோனி சிரித்துக்கொண்டே செல்கிறார். இந்தக் காட்சி அங்குள்ளா ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






உலகக் கோப்பையில் இரு அணிகளின் நேருக்கு நேர் மோதல்களைப் பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் பாகிஸ்தான் இன்னும் வெற்றி பெறவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.


முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வழிகாட்டியாகவும், விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராக 13-0 என்ற வெற்றியை நீட்டிக்க வேண்டும் இந்திய ரசிகர்களின் விருப்பமாகும். உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி ஒவ்வொரு முறையும் வெற்றியை ருசித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண