இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வழிகாட்டியாகவும், விராட் கோலியை கேப்டன்சியாகவும் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை 13-0 என நீட்டிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


ஏழாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


உலகக் கோப்பையில் இரு அணிகளின் நேருக்கு நேர் மோதல்களைப் பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் பாகிஸ்தான் இன்னும் வெற்றி பெறவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.


முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வழிகாட்டியாகவும், விராட் கோலியின் கேப்டன்சியாகவும் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை 13-0  என்று நீட்டிக்க வேண்டும் இந்திய ரசிகர்களின் விருப்பமாகும். உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி ஒவ்வொரு முறையும் வெற்றியை ருசித்துள்ளது.






 


இந்திய அணி 


ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். கேப்டன் விராட் கோலி பெரும்பாலும் மூன்றாவது இடத்தில் பேட் செய்வார். சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யலாம். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்யலாம் மற்றும் ஹர்திக் பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசினால், இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கலாம். புவனேஸ்வர் குமார் உட்காரவைக்கப்படலாம். சுழற்பந்து ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவின் இடம் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் அஷ்வின் பயிற்சி ஆட்டங்களில் அற்புதமாக பந்துவீசுவதன் மூலம் இந்தியா XI இல் இடம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஜடேஜா மற்றும் அஷ்வின் தவிர, வருண் சக்ரவர்த்தியும் அணியில் இடம்பெறுவார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார்கள்.


இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.


பாகிஸ்தான் அணி


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் நேற்று அறிவித்தது.


12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ரிஸ்வான் (வி.கீ), முகமது ஹபீஸ், ஷதாப் கான், இமாத் வாசிம், ஷோயப் மாலிக், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப்.


அப்போதில் இருந்து இப்போது வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கணிக்கமுடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது. அந்த அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வியும் அடையும். ஆச்சர்யமளிக்க கூடிய வகையில் வெற்றியும் பெறும். அதனால், பாகிஸ்தானை எளிதில் சுலபமாக இந்திய வீரர்கள் எடுத்து கொள்ளமாட்டர்கள். பாகிஸ்தான் வலுவான அணி என்றும், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர் எனவும் விராட் கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபக்கர் ஜமான்,  முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் அந்த அணிக்கு பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள். அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் மிரட்டும் திறன்படைத்தவர்கள்.


ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளுகும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 7இல், பாகிஸ்தான் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது டி20 போட்டியில் இந்தியாவின் கையே அதிகம் ஓங்கியுள்ளது.


இருப்பினும் பழையது எல்லாம் மறந்து, உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாற்றை படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களும், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கணக்கை அப்படியே தொடர வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்களும் இருப்பார்கள். இதனால், இன்றையப் போட்டியின் மீது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இருக்கும். ஆட்டத்திலும் அனல் பறக்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண