டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 2வில் நடைபெறும் இன்றைய சூப்பர் 12 போட்டியில் ஆஃப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3ஆவது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷேசாத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹசரத் ஷாசையும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்து திணறியது. அப்போது 6ஆவது ஓவரின் முதல் பந்தில் ரமனுல்லா குர்பாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி பவர்பிளேவின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. குலாப்தின் நையிப் மற்றும் நஜிபுல்லா ஷர்தான் ஒரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் சோடியின் பந்துவீச்சில் நையிப் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கை பார்த்து இந்திய ரசிகர்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், என்ன நடக்கும் என்று தெரியாது பார்ப்போம் ஆவலுடம் இருக்கிறோம் ஆஃப்கானிஸ்தான் என்பதை குறிக்கும் வகையில் ஒரு ஸ்மைலியை அவர் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவை டி20 உலகக் கோப்பை தொடரின் ட்விட்டர் பக்கம் மேற்கோள் காட்டி ஒரு பதிவை செய்துள்ளது. அதில், "அனைத்து இந்தியாவும் உங்களை போல் தான் ஆவலுடன் உள்ளது" என்பது போல் பதிவிட்டுள்ளது. இந்த இரு பதிவுகளையும் ட்விட்டரில் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் மற்றொரு இந்திய வீரரான தினேஷ் கார்த்தின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று ஆஃப்கானிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரயிலில் ஏறுங்கள் என்று ஒரு பதிவை செய்துள்ளார். அதுவும் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: அடுத்தடுத்து 4 விக்கெட்: இந்தியா வாய்ப்பை பெவிலியனுக்கு கொண்டு செல்லும் ஆப்கான்!