இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பதை உறுதி செய்யும் ஆப்கான்-நியூசி., டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சற்று முன் தொடங்கியது. இந்த போட்டியில் ஆப்கான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பு என்பதால், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இன்று டிவி முன் அமர்ந்திருக்கின்றனர்.


பலமான நியூசிலாந்து அணியை ஆப்கான் அணி வீழ்த்துமா என்கிற கேள்வியும் ஒருபுறம் இருக்க முதலில் பேட் செய்த ஆப்கான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் ஹசரத்துல்லா 4 பந்தில் 2 ரன்கள் எடுத்து போல்டு பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஷாஷத் 11 பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் மைன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.






 


இதனால் ஆப்கான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய குர்பாஷ், 9 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.


 


 





  நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நய்ஃப் மற்றும் ஜார்டன் ஜோடி தற்போது நிதானமாக ஆடி வருகிறது. நய்ஃப் 14(16), ஜார்டன் 26(17) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் தான் ஆப்கான் அணி தனது 4வது விக்கெட்டை இழந்தது.15 ரன்னில் நய்ஃப், சோதி பந்தில் போல்டானார்.






 


அடுத்தடுத்து நான்கு முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியிருப்பதால் இந்தியாவின் அரையிறுதி கனவுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. அதே நேரத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற முழு வீச்சுடன் நியூசிலாந்து பந்து வீசி வருகிறது. 4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கான் அணி, 10.3 ஓவரில் 58 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.