ஐசிசி டி20 விருது:


ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி, டி20 போட்டிகளில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான விருது பட்டியலில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதுஅதேபோல், விருதுக்கான இந்த ரேஸில் நியூசிலாந்து அணி வீரர் மார்க் சாப்மேன், உகாண்டா அணி வீரர் அல்பேஷ் ரம்ஜானி மற்றும் ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராசா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.


விருது வென்ற சூர்யகுமார் யாதவ்:


இந்நிலையில் தான் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரருக்கானா விருதை சூர்யகுமார் யாதவிற்கு வழங்கி கெளரவித்துள்ளது ஐசிசி. இதற்கான முக்கிய காரணம் கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் மொத்தம் 17 டி 20 போட்டிகளில் விளையாடி சுமார் 733 ரன்களை குவித்தது தான். அதேபோல், அண்மையில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில், மூன்றாவது டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். அதன்படி, அந்த போட்டியில் 56 பந்துகள் களத்தில் நின்ற அவர்   7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். 






அதேபோல், ஐசிசி டி20 பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங்க் பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை வென்ற நிலையில், தொடர்ந்து 2-வது முறையாக 2023 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி உள்பட எந்த இந்திய வீரரும் 2 முறை சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்


மேலும் படிக்க: Jasprit Bumrah: "கேப்டன் பொறுப்பு கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்" - ஜஸ்ப்ரித் பும்ரா